கசியும் எண்ணெயை உறிஞ்சும் பஞ்சு!



கடல்நீரில் கப்பல்களிலிருந்து கசியும் எண்ணெயை உறிஞ்சும் பஞ்சு ஒன்றை இலினாய்ஸிலுள்ள அர்கான் லேபின் சேத் டார்லிங் தன் குழுவினரோடு கண்டுபிடித்துள்ளார்.

திரும்ப பயன்படுத்தும் முறையிலான இப்பஞ்சு, தன் எடையைவிட 90% அதிகளவிலான எண்ணெயை உறிஞ்சுகிறது. தற்போது எண்ணெயை உறிஞ்ச பயன்படுத்தும் பொருட்கள் மறுமுறை  பயன்படுத்த  முடியாதது பெரிய மைனஸ். இவை 70% எண்ணெயை நீரி
லிருந்து உறிஞ்சுகின்றன.

பாலியூரித்தேன், சிலேன் ஆகியவற்றால் உருவாகியுள்ள புதிய பஞ்சானது, ஆய்வில் பயன்படுத்தப்பட்ட பிறவற்றைவிட நன்கு செயல்பட்டது. ஆனால் கடல்நீரில் எண்ணெயை சேகரிக்க இன்னும் துல்லியமான ஆய்வுகள் தேவை.

“கடல் போக்குவரத்தில் கசியும் எண்ணெயை அகற்ற இது புது தீர்வாக எதிர்காலத்தில்  உருவாகும்” என்கிறார் ஆய்வாளர் சேத் டார்லிங்.  பேரளவிலான எண்ணெய்  கசிவுகளை  விட சிறிய  அளவிலான கசிவுகளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு உதவக்கூடும்.