ஸ்மார்ட் ப்ரொஜக்டர் ஃபாலோகிராம்ஸ்!



குழந்தைகளுக்கு சிம்பிளாக படம் வரைய, எழுத, எண்களை ஜாலியாக சொல்லிக் கொடுக்க ஃபாலோகிராம்ஸ் உள்ளதே! ப்ளூடூத் மூலம் ஃபாலோகிராம் ஆப்பை போனில் கனெக்ட் செய்து குழந்தைகள் தாமே போட்டோ எடுத்து அதனை மெல்ல அவுட்லைன் வரைந்து பழகி குட்டி பிகாஸோ ஆகவும் சான்ஸ்  உண்டு.  27 செ.மீ உயரம், 20 செ.மீ அகலம் கொண்ட ஃபாலோகிராம்ஸ் கருவியை  எளிதாக குழந்தைகளே பிரித்து இணைக்கலாம்.

ஃபாலோகிராமில் உள்ள கன்ட்ரோல்களை மிக எளிதாக முன் பின் நகர்த்தி படங்களை காண்பதோடு அவற்றை  மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் சேமிக்கவும் முடியும். ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்ச், இத்தாலி ஆகிய மொழிகளில் இந்த  ப்ரொஜக்டர்  இயங்குகிறது.  5 வயதுக்கு மேலுள்ள  குழந்தைகள் பயன்படுத்தும் இக்கருவியில் எழுத்துகள் மிகக் குறைவு.

2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃப்ளை கேட்சர் என்ற நிறுவனம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான டிஜிட்டல் பொருட்களை தயாரித்து வருகிறது. அதில் ஒன்றுதான் ஃபாலோகிராம்ஸ். இவ்வாண்டின் இறுதியில் கிடைக்கும் ஃபாலோகிராம்ஸின் விலை ரூ.5002.