ஆல் இன் ஆல் சோல்டர் டூடுல் பிளஸ்!



இன்றைய பரபர உலகில் வீட்டிலிலுள்ள ஒவ்வொரு பொருளையும் சரி செய்ய தனித்தனியே பொருட்களைத் தேடிக்கொண்டிருந்தால் ஆபீஸ் செல்வது மிஷன் இம்பாஸிபிள்தான். வீட்டுவேலைகளை மின்னல் வேகத்தில் செய்ய உதவுவதுதான் சோல்டர் டூடுல் பிளஸ் மல்டி பர்பஸ் கருவி.

முழு கருவிக்கும் தேவை 15 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே. ஓஎல்இடி டிஸ்பிளேயில் பேட்டரி குறித்து தெளிவாக அறியலாம். இடது கை, வலது கை என எவருக்கும் ஏற்ப டிஸ்ப்ளே திரையின் தகவல்கள் இன்ஸ்டன்டாக மாறிக்கொள்வது தனி அழகு. இக்கருவியை நீங்கள் லேப்டாப், அடாப்டர், யுஎஸ்பி சோலார் சார்ஜரில் கூட இணைத்து சக்தி ஏற்றலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணிநேரத்திற்கு தெம்பாய் வேலை செய்கிறது சோல்டர் டூடுல் பிளஸ். சார்ஜ் ஏற்றும் நேரத்திலும் இதனை பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. டெஸ்லா எலக்ட்ரிக் காருக்கான பேட்டரிதான் இக்கருவியிலும் உள்ளதென்பதால் சார்ஜ்  குறையும்  கவலையே  வேண்டாம் உங்களுக்கு. 2018 இல் கைக்கு கிடைக்கும்  சோல்டர் டூடுல்  பிளஸ் கருவியின் விலை ரூ.8671.