மரணம் தரும் விஷக்காற்று!



அணுஉலை, போர், நோய் தாண்டி உலகிலுள்ள மக்கள் இறக்க இன்னொரு காரணமாக மாறிவருவது காற்று மாசுபடுதல்தான். அமெரிக்காவின் ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட்(HEI) வெளியிட்டுள்ள அறிக்கையில்(2015) உலகெங்கும் 4.2 மில்லியன் இறப்புகள் நிகழ்கின்றன என்றால், 2.2 மில்லியன் இறப்புகள் காற்று மாசுபடுதலால் அதுவும் சீனா, இந்தியாவில் இனி நிகழும் என்று கூறியுள்ளது.

உலகில் 92% மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசிக்கின்றனர் என்கிறது இந்த ஆய்வு. காற்று மாசின் விளைவுகளாக புற்றுநோய், பக்கவாதம், இதயநோய் பாதிப்புகளால் ஆண்டிற்கு 1.1 மில்லியன் இறப்புகள் நிகழ்கின்றன என்ற அறிக்கையின் தகவல்கள் அதிர வைக்கின்றன.

“சீனாவில் முகமூடி அணிந்துகொண்டு நடமாடும் நிலையில் அவர்கள் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள். அடுத்து இதில் இந்தியாவும் கவனம் செலுத்தவேண்டும்” என்கிறார் ஹெச்இஐ இயக்குநர் டென் க்ரீன்பாம்.