“மக்களும் அறிவியலும் இணையவேண்டும்”



நேர்காணல்: சூழல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஸ்டாஸி சைமோனிச். தமிழில்: ச. அன்பரசு

உங்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது கடல் உயிரியலாளராக வேலை பார்க்க விரும்பினேன். ஆனால் கூடுதலாக வேதியியலின் பொருட்களை வெடிக்க வைப்பது மீதும் குறையாத ஆர்வம். ஆனால் என் பெற்றோர் எனக்கு மைக்ரோஸ்கோப் மற்றும் டெலஸ்கோப் ஆகியவற்றையே வாங்கித் தந்தனர். பின் ஆர்வம் மாறி இன்று அறிவியலாளராக மாறிவிட்டேன்.
 
ஆராய்ச்சி விஞ்ஞானியாக மாறுவேன் என்று நினைத்தீர்களா?

பள்ளியில் அறிவியல் படிப்புகளை படித்தவள், கல்லூரியில் உயிரியல் மற்றும் சூழல் அறிவியலில் கவனம் செலுத்த தொடங்கியதோடு, அந்நேரத்தில் ஆராய்ச்சி ப்ரொஜெக்ட் ஒன்றையும் மேற்கொண்டிருந்தேன். விஸ்கான்சின் பல்கலைக்கு நான் சென்று வந்தபோது அருகில் சூழல் அறிவியல் பள்ளியைப் பார்த்தேன்.

அங்கு பகுதிநேர வேலையில் சேர்ந்து க்ரீன் பே பகுதியிலுள்ள காற்று மாசுபடுதலுக்கான சாம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்ததனால்  மெல்ல சுற்றுச்சூழல் வேதியியலில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்போது ஆராய்ச்சியாளர் ஒருவர், இந்த ஆராய்ச்சி யில் சிறப்பாகச் செயல்பட ஊக்கப்படுத்தியதும், சூழலையும் வேதியியலையும் ஒன்று சேர்த்ததும் எனக்கு பிடித்திருந்தது.
 
சுற்றுச் சூழல் அறிவியலில் உங்களுக்கு பிடித்தது என்ன?
அறிவியலும் மக்களும் இதில் சந்திக்கும் இடம்தான். மாணவராக இருக்கும்போது ஆராய்ச்சிக்கான வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். மக்களுக்கான நலன் தரும் அறிவியல் என்றாலும் அதனை மக்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நுகர்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தபடியே நான் ஆய்வைத் தொடர்ந்தாலும் ஒருகட்டத்தில் அது நின்றுவிட்டது. சூழல் அறிவியலில் நாம் செய்யும் விஷயங்கள் நாட்டிற்கானது. அனைத்து மக்களும் புரிந்துகொள்ளும்படியான அறிவியலின் இத்தன்மை எனக்கு மிகவும் பிடித்தமானது.
 
உங்களுக்கு சொந்தமான லேபில் பணிபுரிவது எப்படியிருக்கிறது?
தற்போது என்னுடைய லேபில் மொத்தம் 14 பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை  வழங்கி வழிகாட்டுதல்களை தந்து வருகிறேன்.
 
ஆய்வு மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
ஆராய்ச்சியாளர் ஒருவரை சந்தித்து நமது ஆர்வம் குறித்து உரையாடவேண்டும். நமக்கான ஆர்வத்தை தெரிந்த பிறகு அவர்களே எதனை படிக்கலாம் என்பதை முடிவு செய்து விடுவார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு புகழ்பெறவில்லை என்பதையெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. நமது ஆர்வத்தை பின்தொடர்ந்து அதையடைய கடுமையாக உழைத்தாலே போதுமானது.

நன்றி:www.oregonstate.edu