புதிய வரவுகள்!



அமெரிக்காவில் லாஸ் வேகாஸின் நெவாடாவில் நடந்து வரும் 50 ஆவது ஆண்டு எலக்ட்ரானிக்பொருட்கள் கண்காட்சியில் (CES 2017) பிராண்ட் பொருட்களைத் தாண்டிகவனம் ஈர்த்த சில தனித்துவப் பொருட்களைப் பற்றி ஒரு ஜாலி ரைடு…

லீஈகோ சைக்கிள் சாதாரண சாலைகளுக்கான சைக்கிள், மலையேற்றத்திற்கானசைக்கிள் என சூப்பர் வெரைட்டியில் மிரட்டுகிறது லீஈகோ சைக்கிள்கள். இவர்கள் தங்களுக்கென ஒரு  ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங்  சிஸ்டத்தை தங்கள் சைக்கிளில் பொருத்தியிருப்பதுதான் இதில் சூப்பர் ஸ்பெஷல். க்வால்காம் ஸ்நாப்ட்ராகன்410 புரோசஸர் சக்தியோடு 6000எம்ஏஹெச் சக்தி கொண்டபேட்டரி பக்கத்துணை.

டச் ஸ்கீரின் துணையோடு இதனை இயக்கி சாலையில் செல்லும்போது எந்த டர்னிங்கில் திரும்புவது, பாடல்களில் ஏ.ஆர். ரஹ்மானா, இளையராஜாவா என முக்கிய முடிவுகளை முச்சந்திகளிலேயே தேர்ந்தெடுக்கலாம். அதேபோல லீஈகோ சைக்கிள் வைத்துள்ள மற்றவர்களிடமும் டக்கெனஇந்த ஓஎஸ் மூலம் கடலை போட்டு களைப்பு நீக்கலாம். வரும் ஜூன் மாதம் இதில் ஜாலி சவாரி ஷ்யூர்.

குறி ரோபோட் மேபீல்டு நிறுவனம்போஷ்  நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ள அசிஸ்டெண்ட் எந்திரன். பொம்மை போன்ற இந்த குறி ரோபோட் நகருவதற்கு சக்கரங்கள், மற்றும்கேமராவையும் கொண்டுள்ளது. உங்கள் வீட்டை, குழந்தைகளை பத்திரமாகப் பாதுகாக்க இதைத்தவிர சிறந்த காவலன் ஏதுமில்லை. குறி ரோபோட்டினை உங்கள் போனிலுள்ள ஆப் மூலமாகவும் இயக்கலாம்.

அனைத்து முகங்களையும் செல்ஃபி வேகத்தில் படமெடுத்து நெஞ்சில் வைத்துக்கொள்வதால் வீட்டில் அந்நியர் நுழைந்தவுடன்உங்கள் போனுக்கு அலர்ட் மெசேஜ்கள் இன்ஸ்டன்டாக பறந்து வந்துவிடும். ப்ளூடூத் வழியாக  இசையும் கேட்க முடிவது ஸ்பெஷல்.

டிசம்பர் மாதம் டீலர்களிடம் கிடைக்கும் குறி ரோபோட்டின் விலை ரூ. 47, 511 மட்டுமே! 360 ஸ்மார்ட்படுக்கை   இந்த ஸ்மார்ட்படுக்கையில் நீங்கள் எப்படி தூக்கவெறியில் பாய்ந்து படுத்தாலும் சிறிதும் சுணங்காமல் தாமரை இலையின் மேல் படும் சூரிய ஒளி போல உங்களை ஏற்றுக்கொண்டு தேகத்தோடு நேசம் பேசும்.

அதாவது,உல்லாசமாக நீங்கள் குறட்டை விட்டால் படுக்கை மேல் பகுதி மெல்ல மேற்புறமாக உயரும். கால்களில் குளிர்ச்சி அதிகரித்தால் அதனை கதகதப்பாக்கும்கருவி இயங்கத்தொடங்கும்.

இந்த சூப்பர் படுக்கையில் உள்ள சென்சார்கள்உங்களது இதயத்துடிப்பு, மூச்சு, தூக்கத்தின்அளவு ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்வதால் பாதுகாப்பாக  உறக்கத்துக்கு கம்பெனி கேரண்டி. விலை அறிவிக்கப்படாதஇந்த படுக்கைக்கு ஜூன் மாதம் கன்பார்மாக நீங்கள் ஆர்டர் கொடுக்கலாம்.

ஏசர் பிரிடேட்டர் 21 எக்ஸ்  வெறித்தனமான கேம் பிரியர்களுக்கான லேப்டாப்  இது. 8 கிலோ எடையில் 21 இன்ச் திரை லேப்டாப்பில் விண்டோஸ்10, இன்டெல் ஐ7 சிப், என்விடியாகிராஃபிக்ஸ் கார்டு, 64 ராம் என பல்க் பேக்கேஜில் மிரட்டுகிறது ஏசர். கேம் விளையாடும் போது கம்ப்யூட்டர் சூட்டை குறைக்க5 ஃபேன்கள் உள்ளன. அதோடு கேமிங் சூழலுக்குள் நீங்கள்நுழைய 4 ஸ்பீக்கர்களும், 2 சப் ஊபர்களும்கேரண்டி தருகின்றன.

ஹைட்ராவ் ஸ்மார்ட் ஷவர் வெறும் சொய்ங்கென தண்ணீரை அக்கம் பக்கம்தெளித்து குளிப்பது மட்டுமல்ல அதையும் தாண்டி ஹைட்ராவ் ஷவர் ப்ளூடூத் வசதி கொண்டது. குளிக்கும் போதுஎதற்கு பாஸ் ப்ளூடூத்? நீர்சிக்கனத்திற்குத்தான்.

இதிலுள்ள எல்இடி லைட்டுகளில் சிவப்பு நிறம் எரிந்தால் நீரை ஏகபோகமாக வாரி  இறைத்திருக்கிறீர்கள் என்பது லாஜிக் நிஜம். மார்கெட்டில் ஏற்கனவே சக்கைபோடு போடும் இதனை 6730 ரூபாய்க்கு வாங்கி ஜாலி குளியல் போட ரெடியா?

- எஸ்.துரைவீரன்