லேசர் ஒளியில் பியானோ வாசிக்கலாம்!கம்ப்யூட்டரைஆன் செய்ய  தனி கீபோர்ட், பியானோ இசைக்கு தனி கீபோர்ட் என அலைய வைக்காமல் டூ இன் ஒன் ஆக டைப் செய்து ட்யூன் போட்டால் சூப்பர்தானே! அதற்குத்தான் உங்களுக்கு  ஐ கீ போ லேசர் புரொஜெக்ஷன் கீபோர்ட்தேவை.

ஐகீபோஒரு விர்ச்சுவல் கீபோர்டு. லேசர் ஒளியில் கீபோர்டின் பட்டன்கள் உங்கள் முன்னே தெரியும். பிறகென்ன கீபோர்டைப் பார்த்து டைப் பண்ண வேண்டியதுதான் பாக்கி. போன் திரையில் எழுத்துகள் சரியாக வருவது உங்கள் சமர்த்து.

ஆப் மூலம் போனில் டைப் செய்து பைலை கணினிக்கு மாற்றிக்கொள்ளலாம். குறிப்பிட்டமொழியில் தட்டச்சு செய்யும் கீபோர்டை வைத்துக்கொண்டு பிற மொழிக்காரர்கள் என்ன  செய்வது? ஐகீபோ கீபோர்டில் ஆங்கிலம், அரபி, ஸ்பானிஷ், சைனீஸ் உள்ளிட்ட மொழிகளுக்கான லேஅவுட்கள்உண்டு.

தேவையானதைத் தேர்ந்தெடுத்து சட்டுபுட்டென வேலையை முடிக்கலாம். இதற்கென தனி சாப்ட்வேர் இன்ஸ்டால் வேலை மிச்சம். இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப் மூலம் பியானோ, கிடார், ட்ரம்ஸ் என பலதையும் வாசித்து வீட்டுக்கு வந்து செட்டிலான விருந்தாளிகளையும் எளிதாக விரட்டலாம். இனிய கீதங்களை இரவில் கேட்டு கொண்டாட, நண்பர்களோடு பார்ட்டி பண்ணும் போதும் உங்களுக்கு சுமாராக வாசிக்க தெரிந்திருந்தால்  போதும், ஐகீபோ சூப்பர் சப்போர்ட் செய்யும்.

ஐகீபோவை பயன்படுத்தாத போது சார்ஜராக பயன்படுத்தி டக்கென ஆஃப்பாகும் ஸ்மார்ட்போன், டேப்லட்களுக்கு மறுஜென்மம் கொடுக்கலாம். லைட்வெயிட்டில் பாக்கெட் ஃப்ரெண்ட்லி என்பதால் எங்கும்  எளிதாக  எடுத்துச்செல்ல  முடியும்.

இதில் சாதாரண கீபோர்டுகளில் இருக்கும் சதுர வடிவ கீக்களுக்கு பதில் வட்டவடிவில் அமைந்திருப்பதால் தவறான கீ அழுத்தப்பட வாய்ப்பு குறைவு.மொபைல் ஸ்டேண்டாகவும் பயன்படுத்தலாம்.

2000 மில்லி ஆம்ப் லித்தியம் அயன் பேட்டரி உங்களுக்கு 10 மணி நேரத்திற்கு கேரண்டி தருகிறது. 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செராஃபிம் நிறுவனம்தான் ஐகீபோவுக்கு தாய். இதனை ஐகீபோ ஆப் மூலம் இயக்கலாம்.

கம்ப்யூட்டர் பொருட்களில் புதுமைப் பொருட்களைத் தயாரிக்கும்  இந்நிறுவனத்தின்  பெயருக்கு நெருப்பு என்று அர்த்தமாம். 4 மொழி கீபோர்டின் விலை ரூ.6058ரூபாய்.ஜூன் 2017க்குப்பின் வாங்கி ட்யூன் போடத்தொடங்கலாம்.

- இ.டி.கவிதா