நம்பினால் நம்புங்கள்



*2006ல் ebay வலைத்தளம் வாயிலாக நியூசிலாந்து நாட்டை விற்பனை செய்ய ஆஸ்திரேலிய ஆசாமி ஒருவர் முயற்சி செய்தார்!

*உலகிலேயே மிகப்பெரிய தபால் துறை இந்தியாவில்தான் உள்ளது. ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள்!

*பென்சில் கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகளுக்குப் பிறகே எரேசர் எனும் அழிரப்பர் கண்டுபிடிக்கப்பட்டது.

*1995ல், உலக கம்ப்யூட்டர்களில் மிக அதிக அளவு நிறுவப்பட்டது டூம் எனும் வீடியோ கேம்தான். இரண்டாவது இடம் பிடித்தது விண்டோஸ் 95!

*பெங்குவின் மற்றும் சிம்பன்சிகளிடத்திலும் பாலியல் தொழில் அறியப்பட்டுள்ளது.

*இப்போதைய அமெரிக்கக் கொடியை வடிவமைத்தது 17 வயது இளைஞர் ஒருவரே. இந்த வடிவமைப்புக்கு முதலில் அவருக்கு ’பி-கிரேடு’தான் கிடைத்தது!

*ஆப்பிள் நிறுவன லோகோ ஆப்பிளில் ஒரு சிறு கடி காட்டப்படு வதற்குக் காரணம்... அது செர்ரி பழம் அல்ல எனத் தெளிவுபடுத்துவதற்காகவே!

*காலையை விட மாலையில் நாம் ஒரு சதவீதம் உயரம் குறைகிறோம்.