பூனைக் கரடி தெரியுமா?



உருவத்தில் பாண்டாவைவிட சிறியதாக இருக்கும் சிவப்பு பாண்டாவை ‘பூனைக் கரடி’ என்று அழைக்கின்றனர். ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது பாண்டா. சிவப்பு பாண்டாக்கள் அதிகபட்சம் 13 ஆண்டுகளும், பாண்டாக்கள் சுமார் 26 ஆண்டுகளும் வாழும்.
பாண்டா குட்டிகள் 18 மாதங்களில் 45 கிலோ எடையை எட்டும். அதன்பின் தனியே வாழத் தயாராகிவிடும்.

கருத்தரிக்கும் காலம் தவிர, மற்ற காலங்களில் பாண்டாக்கள் தனியாக வாழ்வதையே விரும்பும்.பிறந்த குட்டிகளுக்கு கண் தெரியாது. பற்களும் கிடையாது. குட்டிகளைத் தாய் மட்டும் வளர்க்கும். பாண்டாக்களின் கர்ப்ப காலம் 90லிருந்து 160 நாட்கள் வரை.

ஒரு வருடம் வரை குட்டிகள் பால் மட்டும் குடிக்கும். மூங்கில் சாப்பிடாது.
பிறக்கும் குட்டி, எலி அளவுக்குத்தான் இருக்கும்! பாண்டாக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு மூங்கில்தான். தினமும் 12 மணி நேரத்தை மூங்கிலின் கடினமான வேர் மற்றும் தண்டுப் பகுதிகளை கடித்து உண்பதிலேயே செலவழிக்கும்.

 பாண்டாக்கள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று. தட்பவெப்ப நிலை மாற்றமும் உணவுப் பற்றாக்குறையும்தான் இதற்குக் காரணம். குட்டி பிறந்து ஒரு வாரம் கழித்தே சாப்பிடச் செல்லும் அம்மா பாண்டா. அதுவரை குட்டியைத் தனியே விடாது.

பாண்டாக்கள் பலவிதமான சத்தங்களை ஏற்படுத்தும். உறுமுவது, ‘கீச்... கீச்...’ சத்தம் தவிர, குரைக்கக்கூட செய்யும். மூங்கிலைத் தவிர பாண்டாக்கள் சிறு செடிகள், குட்டி மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும். மூங்கில் கிடைக்காத காலங்களில் கொலைப் பட்டினி கிடக்கும். உருவ அமைப்பில் வித்தியாசமான அழகுடன் உள்ள பாண்டாக்கள் அரிதான விலங்குகளில் ஒன்று.

இந்த இரண்டு காரணங்களுக்காகவே கீகீதி   அமைப்பின்   சின்னமாக பாண்டா இருக்கிறது. பாண்டாக்கள் 120 செ.மீ முதல் 150 செ.மீ உயரம் வரை வளரும். எடை 75லிருந்து 115 கிலோ வரை இருக்கும். சிவப்பு பாண்டாக்கள் 60 செ.மீ வளரும். இது தவிர அவற்றின் வால் தனியாக 48 செ.மீ இருக்கும்.  பாண்டாக்கள் மத்திய சீனப் பகுதியிலுள்ள மலைகளிலும் சிவப்பு பாண்டா இமயமலையின் வடபகுதியில் சில இடங்களிலும் மத்திய மற்றும் தென் சீன மலைகளிலும் வாழ்கின்றன.

 ஏ.ஃபைஹா, கீழக்கரை.