அடர்த்தியாக கண் இமை வளர!
இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. இதற்கு இயற்கையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நீண்ட அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகள் பெறலாம். இதில் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது. அவற்றைப் பார்ப்போம்.
கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்தானது கண்இமை வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை இரவில் கண் இமைகளில் தடவ வேண்டும். பின்னர் காலையில் முகத்தை கழுவ வேண்டும். இதன்மூலம் இமைகள் நீரேற்றமாக வைத்து ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது.
கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக அமைகிறது. மேலும் கண்களை அழகாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. தேங்காய் எண்ணெயை புருவங்கள் மற்றும் இமைகளில் லேசாக தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவரும் போது இமை முடி தடிமனாகவும், வலுவாகவும் வளர்வதை பார்க்கலாம்.
வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது இமைகளை வலுப்படுத்துவதுடன், அவை உடைவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு சுத்தமான தூரிகை அல்லது விரலை பயன்படுத்தி சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயை கண்களில் தடவ வேண்டும். இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கண் பார்வைக்கும் உதவுகிறது. முடி ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே, புருவத்தில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த விஷயமாகும். ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இது வேர்களிலிருந்து கண் இமைகளுக்கு ஊட்டமளிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் ஆமணக்கு எண்ணெய் கண் இமை முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஒரு சிறிய துண்டு பருத்தித் துணியை எண்ணெயில் தோய்த்து, இரவில் படுக்கைக்கு போகும் முன்னதாக கண் இமையில் தடவ வேண்டும். பிறகு இதை காலையில் கழுவி விடலாம். இதன்மூலம் தடிமனான, ஆரோக்கியமான கண் இமைகளைப் பெறலாம்.
- ரிஷி
|