செய்திகள் வாசிப்பது டாக்டர்



இது சூப்பர்!

மருத்துவ உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான சங்கீதா பாட்டியா.

புதிய மருந்துகள் கண்டுபிடிக்கும்போது அந்த மருந்தை மனிதர்களுக்குக் கொடுத்து பரிசோதிக்கும் கட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் செயற்கை கல்லீரல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் சங்கீதா.அமெரிக்காவின் எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் சங்கீதா பாட்டியா பொறியியல், மருத்துவம் என இரண்டு துறைகளிலுமே டாக்டர் பட்டம் பெற்றவர்.

கல்லீரல் சார்ந்த நோய்களுக்குக் கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவரது கண்டுபிடிப்புக்காக 2015ம் ஆண்டின் பெருமைமிக்க `ஹைன்ஸ் விருது' சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விருதுடன் வழங்கப்பட்ட பரிசுத்தொகை ஒன்றரை கோடி ரூபாயை, தன்னைப் போல அறிவியல் ஆராய்ச்சி களில் ஈடுபடும் பெண்களின் கல்விக்காக வழங்குவதாக அறிவித்திருக்கிறார் சங்கீதா பாட்டியா.