கொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா?!



மாத்தி யோசி

கொரோனாவை எதிர்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தாக்குதலுக்கு முன்பாகவோ அல்லது நோயின் தாக்கத்தின்போதோ  ஹோமியோபதி மருத்துவ முறையில் Arsenicum Album 30C என்ற மாத்திரையை உட்கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.இதுகுறித்து ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் வெங்கட்ராமனிடம் பேசினோம்...

‘‘ஆர்செனிக்கம் ஆல்பம் 30c என்ற மாத்திரையை எல்லா தரப்பினரும் உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு குறைவாக இருந்தால் காலையில் வெறும்  வயிற்றில் சிறியவர்கள் 4 மாத்திரையு–்ம், பெரியவர்கள் 6 மாத்திரையும் என 3 நாளைக்கு எடுத்துக்ெகாள்ளலாம். நோய் பரவும் அபாயம் தற்போது  அதிகமாக இருப்பதால் தொடக்கத்திலேயே 10 நாட்களுக்கு எடுத்துக்கொள்வதால் எந்த பின் விளைவும் ஏற்படாது. நோயின் தாக்கத்தைப் பொறுத்து,  மறுபடியும் ஒரு மாதம் கழித்து கூட தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

நோய் வந்த பிறகும் நோய் அதிகமாக பரவாமலும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட ேஹாமியோபதியில் மருந்துகள் உள்ளன. நிமோனியா போன்ற  காய்ச்சல்கள் வந்தாலும் அதற்கும் மருந்துகள் இருக்கிறது. மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உள்ள அறிகுறிகள் பார்த்து கொடுக்க முடியும். ஆர்செனிக்கம் ஆல்பம் 30c என்பது ஆர்செனிக் என்கிற ரசாயனப் பொருளில் இருந்து மிக மிக நுண்ணிய அளவில் தயாரிக்கப்படுகிறது. இதனால்  அதன் பக்க விளைவுகள் இல்லாததாகவும் குணம் கொடுப்பதாகவும் இருக்கிறது. நாம்  குடிக்கும் தண்ணீரிலேயே ஆர்செனிக் இருக்கிறது. அதைவிட  மிகவும் நுண்ணிய அளவில் இந்த மருந்து  தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹோமியோபதி மருத்துவத்தில் நோயின் அறிகுறியை கணக்கில் கொண்டு, நோய் வராமல் தடுக்க மருந்துகள் கொடுக்க முடியும். உதாரணமாக  இந்தியாவில் பறவைக் காய்ச்சல், டெங்கு முதலிய தொற்று நோய்களில் ஹோமியோபதி மருந்துகள் ெவற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஆந்திராவில் மூளைக்காய்ச்சலுக்கு ஹோமியோபதி மருந்துகள் கொடுத்ததால் மரணம் நேராமல் தடுக்கப்பட்டதாக அந்த மாநில அரசே சான்றிதழ்  வழங்கி உள்ளது. தற்போது கேரளா அரசு ஆர்செனிக்கம் ஆல்பம் 30c-ஐ வீடு வீடாக கொடுத்துள்ளனர். பத்திரிகை துறையில் வேலை செய்பவர்களும்  இந்த மாத்திரையை வாங்கி உட்கொண்டு வருகின்றனர்.

ஹோமியோபதி மாத்திரைகள் மிகச்சிறிய மருந்தளவு(Minute dosage) என்பதால் அது ரத்தத்தில் சென்று கலக்கிறதா அல்லது நரம்பு வழியாக  செயல்படுகிறதா என்று கண்டுபிடிப்பது கடினம். ஆர்செனிக்கம் ஆல்பம் 30c என்பது கொரோனா வருவதற்கு முன்பாக எடுத்துக்கொள்வதால்  குணப்படுத்தும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ெதாற்று வராமல் தடுத்துவிடும் என்றும் சொல்ல முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகப்படுத்துகிறது என்றுதான் சொல்ல முடியும். அப்படியே கொரோனா வந்த பிறகு மருந்து எடுத்துக்கொண்டாலும் தங்களை பாதுகாத்துக் ெகாள்ள  உதவும் ஒரு கருவியாக இந்த மருந்து பயன்படுத்திக்
ெகாள்ளலாம்.  
கொரோனா வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதால் ஆர்செனிக்கம் ஆல்பம் 30c மருந்தை அனைத்து மருந்துக் கடைகளிலும் விற்கப்பட வேண்டும் என்று  அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது இந்த மருந்து மாவட்டங்கள்தோறும் உள்ள பல்வேறு ஹோமியோபதி அசோஷியேசன்கள் மூலமாக  தனி நபர்களுக்கு தனிபட்ட முறையில் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசே இதை பொறுப்பேற்று அனைவருக்கும் கொடுக்க முன்வரும்போதுதான் இதன்  தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த மாத்திரையின் பயன் அனைவருக்கும் கிடைக்கும்’’ என்றவரிடம், ஆர்செனிக்கம் ஆல்பம் 30c-யில் என்னென்ன  மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று கேட்டோம்...

‘‘ஆர்செனிக்கம் ஆல்பம் 30c-யில் ஆர்செனிக் என்ற ரசாயனம் தவிர்த்து, வேறு எந்த மூலக்கூறும் சேர்க்கப்படவில்லை. எனவே எல்லோருக்கும்  இம்மருந்து சென்று சேர வேண்டும். மருத்துவமனையில் இடம் இல்லாத சூழ்நிலையில் Positive என்று தெரியவரும்போது, நோயாளியை வீட்டிலேயே  இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு தற்போது கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் எல்லா மருந்தகங்களிலும் இந்த  மருந்து கிடைக்க அரசு ஏற்பாடு செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த மாத்திரையின் பலனை பலரும் ெபறுவர்.

ஹோமியோபதி மாத்திரைகள் எந்த பக்கவிளைவுகளும் இல்லாதது. எனவே, ஆராய்ச்சிரீதியாக இரண்டு மாவட்டங்களுக்கு ஆர்செனிக்கம் ஆல்பம் 30c  என்ற மாத்திரையை கொடுத்து அரசு கொரோனா தாக்கத்தை கணக்கெடுக்கலாம். இந்த மாதிரியாக எடுக்கப்படும் துல்லியமான எண்ணியல்(Static)  மூலம்தான் எத்தனை பேர் குணமடைந்தனர் என்று உறுதியாக கூற முடியும். கபசுரக் குடிநீரை அரசு பரிந்துரைக்கிறது, ஆர்செனிக்கம் ஆல்பம்  தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாற்று மருத்துவத்துக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், அரசு  இந்த மருந்துகள் குறித்து ஆய்வுப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டால் பொதுமக்கள் மத்தியில் இன்னும் நன்மதிப்பினை மாற்று மருத்துவம்  பெறும்.’’

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா?!
‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு Zin மாத்திரைகள் அரசு தருகிறது. அதேபோன்று மூச்சடைத்து சிரமப்படுபவர்களுக்கு Zincummuriaticum  மாத்திரைகள், நிமோனியாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் Veratrumviride என்பது போன்று 100 மருந்துகள் ேஹாமியோபதியில் உள்ளன.’’

- அ.வின்சென்ட்