ரோஜா... ரோஜா...



ஸ்பெஷல்

அழகின் மறு உருவமாகவும், காதலின் அடையாளமாகவும் உள்ள ரோஜாவுக்கு மருத்துவரீதியாகவும் பல்வேறு முக்கியத்துவங்கள் இருக்கின்றன.

* எல்லோருக்கும் எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருப்பது பிடிக்கும். ரோஸ் வாட்டர் சருமத்தின் சுருக்கத்தைப் போக்கி இளமைத்தோற்றத்தை நீட்டிக்கவும், பளபளப்பாகவும் செய்திடும்.

* உலகில் சுமார் 150 வகை ரோஜா இனங்கள் உள்ளன. இவற்றை கலப்பினம் செய்து ஆயிரக்கணக்கான ரோஜா வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் கலப்பு ரோஜாக்களைவிட, பன்னீர் ரோஜா மற்றும் நாட்டு ரோஜாக்கள்தான் மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.

* பித்தத்தாலோ அல்லது காரணம் கண்டுபிடிக்க முடியாமலேயே சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். இவர்கள் புதிதாய் பூத்த, வாசம் மிகுந்த ரோஜாவை முகர்ந்து பார்ப்பதாலேயே இவர்களின் கடுமையான தலைவலியும் பறந்தோடிவிடும்.

* புலால் உணவுகளை உண்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ சிலருக்கு அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, எப்போதும் உடல்துர்நாற்றத்தோடு இருப்பார்கள். ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் உடலின் உஷ்ணத்தன்மை நீங்கி, உடல் குளிர்வடையும். இதன்மூலம் வியர்வை சுரப்பதும் குறைந்து எப்போதும் ஃப்ரஷ்ஷாக இருக்கலாம்.

* ஒரு சிலருக்கு பகலில் வெளியில் சென்றால் மயக்கம் வரும். அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் தடைபட்டு, மயக்கம் வரும். வெளியில் போகும்போது ரோஜா இதழ்களை முகர்வதாலும், அவற்றை சாப்பிடுவதாலும் மயக்கத்திலிருந்து விடுபடலாம். உடல் மற்றும் மனம் சுறுசுறுப்படையும்.

* ரோஜா இதழ்கள், வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. பசியைத் தூண்டக் கூடியது. மலச்சிக்கலை போக்கக்கூடிய அருமருந்து. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்க ரோஜா இதழ்களை சாப்பிடலாம்.

* வெப்பம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்கும், கணினி முன்பு நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கும் விந்தணுக்கள் உற்பத்தி குறைந்து. கருவுறாமை (Infertility) பிரச்னை வருகிறது. ரோஜா இதழ்களை சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சி அடைந்து விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. ரோஜா இதழ்களை முகர்ந்து பார்ப்பதால் உடல் உறவில் ஆர்வம் இல்லாதவர்களுக்குத் தாம்பத்ய ஆர்வத்தை அதிகரிக்கும்.

* உடல் உஷ்ணத்தாலும், காரமான உணவை சாப்பிடுவதாலும், சிலருக்கு வாயில் அடிக்கடி புண் ஏற்படும். இதற்காக மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதைவிட, ரோஜா இதழ்களை சாப்பிடும்போது உடல் சூடு குறைந்து புண்களினால் உண்டாகும் எரிச்சல், வலி குறையும்.

* சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி, அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இவர்கள் காலையில் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வருவதால் மாதவிடாய் பிரச்னைகள் நீங்கும். செரிமானக் கோளாறாலும், உடல் உஷ்ணத்தாலும் வயிற்றுப் போக்கு ஏற்படுபவர்கள் தொடர்ந்து ரோஜாப்பூக்களை சர்க்கரையோடு சேர்த்து சாப்பிடுவதால், சீதபேதி, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

* குளிக்கும்போது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு குளித்தால் நாள் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக நறுமணத்தோடு இருக்க முடியும்.

* ரோஜாவில் உள்ள வைட்டமின் ‘சி’ நல்ல ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. இது சருமத்தில உள்ள செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.

* ரோஜாவின் வாசனை மனதை அமைதியாகவும், ஒருநிலைப்படுத்தவும் முடியும் என்று ஆய்வில்
சொல்லப்படுகிறது.

* ரோஜா இதழ்கள் சாப்பிடுவதால் உடலின் ஹார்மோன்கள் சமநிலைத் தன்மையை மேம்படுத்த முடியும். கண்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்கும் வலிமை ரோஜாவுக்கு உண்டு.

* ரோஜா இதழ்கள் சிலவற்றை படுக்கையில் தூவுவதால் அதன் நறுமணம் நல்ல தூக்கத்தை தருவதாகவும் தற்போது ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

* ரோஜா இதழ்கள் சாப்பிடுவதால் உடலின் ஹார்மோன்கள் சமநிலைத் தன்மையை மேம்படுத்த முடியும். கண்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்கும் வலிமை ரோஜாவுக்கு உண்டு.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் நீர்ச்சுறுக்கு என்று சொல்லப்படும் சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கு ரோஜா நல்ல மருந்து. ரோஜா இதழ்களை காயவைத்தோ, பச்சையாகவோ சாப்பிடுவதால், சிறுநீர் பெருகும். தொண்டைப்புண், குடல்புண் ஆகியவற்றுக்கும் ரோஜா நல்ல
மருந்தாகிறது.

* ரோஜாப்பூவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மையால், ரோஜாவிலிருந்து தயாரிக்கும் பன்னீரை முகத்தில் பூசினால், முகப்பருக்கள் குறையும். பருக்கள் வந்த  இடத்தில் இருக்கும் தழும்புகளையும் போக்கும்.

* மாணவர்கள் படிக்கும் அறையில் ரோஜாவை வைத்திருப்பதால் அதன் நறுமணம் மூளையின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதாகவும், இதனால் அவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

* காலையில் வெறும் வயிற்றில் ரோஜா இதழ்களை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து காக்கிறது. ரத்தம் உறைவது, கட்டிகள் உருவாவதை ரோஜா இதழ்கள் தடுக்கிறது.

* ரோஜாவின் பழம் ‘ரோஸ் ஹிப்’ என்று அழைக்கப்படுகிறது. இது பெர்ரி அளவுடைய மாதுளங்காய் போல இருக்கும். பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் இந்த ரோஜாப் பழங்களைக் கொண்டு ஜாம், ஜெல்லிகள் தயாரிக்கப்படுகிறது. சில மருத்துவ குணங்களுக்காகவும் இதை பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுவதுண்டு.

* வெயில் காலத்தில் ரோஜரிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்தை சாப்பிடுவதால், வெயில் கட்டிகள், வியர்க்குரு போன்றவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கலாம். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் ரோஜா இதழ்கள் உதவுகிறது.

தொகுப்பு: இந்துமதி