போலியோ சொட்டு மருந்து தினம் அறிவிப்பு



*தகவல்


தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டிலும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறை இப்போது செயல்படுத்தப்படுகிறது.

 இதன் அடிப்படையில் எதிர்வரும் 2020-ம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து தினம் வருகிற ஜனவரி 19-ம் தேதியில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல் 72 லட்சம் குழந்தைகள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பணி தமிழகத்தில் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும். இதற்கான பணிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். கடைசியாக இந்த 2019-ம் ஆண்டில் மார்ச் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

* ஜி.ஸ்ரீவித்யா