டியர் டாக்டர்



*‘இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்’ என்று கிண்டலடிக்கும் வகையில் இருந்த விநோதமான சிகிச்சைகள் ரசிக்க வைத்தது. எப்போதும் துக்கமும், துயரமுமாய் வாழ்கிற மனிதர்களுக்கு சரியான அறிவுரை ‘மகிழ்ச்சியைத் தள்ளிப்போடாதீர்கள்’ கட்டுரை. விவசாயத்தைப் பற்றிய அச்சம் அனைவருக்கும் இருக்கும் இந்நாளில், நாளைய உணவுகள் பற்றிய கண்டுபிடிப்புகள் நிம்மதியைத் தந்தது. Future Kitchen பார்த்து இப்படியும் வருமா என மலைப்பாக இருந்தது.
- கந்தசாமி, பெரியகுளம்.

* ஆண்களின் ஆரோக்கியத்திற்காகவும் ‘கொடி’ பிடித்திருக்கிறீர்கள். நன்றி! Only For Male-னு சொல்லாமல் Strictly For Male என்று இன்னும் அழுத்தமாக சொல்லி பலவற்றை விளக்கியது தனிச்சிறப்பு. கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் கதையும் சரி... அதன் செயல்பாடுகளும் சரி... நமக்குக் கிடைத்த பரிசு என்றே சொல்லலாம். கோதுமைப்புல் பற்றிய தகவல்கள் கேள்விப்படாதவையாக இருந்தன. முதியோர் நலம் கருதி மருத்துவர் லக் ஷ்மிபதி ரமேஷ் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் அருமை.
- சுகந்தி நாராயண், வியாசர் நகர்.

* ஆண்கள் நலனில் அன்பு காட்டி வெளியாகியிருந்த கட்டுரையின் தகவல்கள் அத்தனையும் பயன்மிக்கவை. அத்தனை ஆண் சமூகம் சார்பாகவும், ஆண்களை சார்ந்திருக்கும் பெண்கள் சார்பாகவும் நன்றி. ‘லேட்டா சாப்பிடுறவங்களுக்கு கேன்சர் அபாயம்’ என்ற செய்தி, தற்போதைய நிலைக்கு அவசியமான ஒன்று.
- இல.வள்ளிமயில், மதுரை.  

* முதன்முறையாக அக்டோபர் 1-15 குங்குமம் டாக்டர் இதழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பக்கத்திற்குப் பக்கம் பயனுள்ள விசயங்கள்... இத்தனை நாட்களாக படிக்காமல் தவற விட்டுவிட்டோமே என்ற எண்ணத்தை தூண்டும் அளவுக்கு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் இவ்விதழ் இருந்தால் டாக்டரிடம் செல்வது பெருமளவு குறையும்!
- எல்.இரவி, செ.புதூர்.

* ‘அலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்’ கவர் ஸ்டோரி உடல் நலம் பேணுவதில், ஆண்களும் அக்கறை காட்ட வேண்டிய அவசர அவசியத்தினை விளக்கியிருந்தது. குறட்டை போடும் நபர்கள் மற்றும் அதிகப்படியாக சிறுநீர் கழிப்பது, போன்றவற்றினால் ஏற்படக்கூடிய உடல்நலக் கேடுகள் குறித்த எச்சரிக்கை சூப்பர்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* ‘கொஞ்சம் நிலவு’ பகுதியில் இந்தமுறை வந்த விஷயங்கள் மழலை இல்லாத தம்பதிகளின் குழப்பமான வாழ்விற்கு நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- வனஜா, கோவைப்புதூர்.

* எல்லா பக்கங்களையும் சீரியஸாக படித்து தெரிந்து கொண்டபின், கடைசிப் பக்கங்கள் வரும்போது, உண்மையிலேயே ஒருவிதமான ‘ரிலாக்ஸ்’-தான்.
- கண்ணன், பெருங்களத்தூர்

* சந்தோஷமாக இருக்க இப்படியெல்லாம் கூட ஹார்மோன்ஸ் இருக்கா என்ன? நிச்சயம் பாராட்டவேண்டிய தகவல்தான். ‘உணவுக்கு முன், உணவுக்குப்பின்’ உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணன் கூறிய செய்திகள் உணவைப்பற்றிய நம்முடைய பெரும்பாலான குழப்பங்களுக்கு விடையாய் இருந்தது.
- கோமதி, காவேரிப்பட்டினம்