பிரியங்களுடன்



உண்ணும்  உணவில் கூட சாதி மத பேதமா - என அதை களைய உணவுப் புரட்சியாய் சத்துணவுப் பணியில் முத்திரை பதிக்கும் பாப்பம்மாள் வணங்கி போற்றி பாராட்ட வேண்டியவர்.
- கவிதா சரவணன், திருச்சி.

‘பேராபத்தில் முடிந்த பேரிடர் பயிற்சி’... இனி மேலாவது ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. ‘தங்க மங்கை’ ஹீமாதாஸ் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

வாழ்க்கை என்பது சூழலால் கட்டமைக்கப்படுவது என்பதை நிரூபித்த தன் வாழ்க்கையில் சாதனை புரிந்து வரும் ஆசிரியை உமாவின் சேவை அளப்பரியது!
- கே.எல்.புனிதவதி, கோவை-17.

ரஞ்சனி பற்றிய கட்டுரைக் கண்டேன். கட்டுரை மற்றும் புகைப்படங்களை கண்டதும் அந்த கால நினைவுகளை மெய்மறந்து ரசித்தேன்.
சேலத்தை கலக்கும் சூரியன் எஃப்எம் பெண்கள்... ஆண்களுக்கு பெண்கள் சரிசமம் என்பதற்கு இதற்கு ஓர் சான்று.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘வாழ்வென்பது பெருங்கனவு’ ஒவ்வொரு பெண்ணுக்குள் பற்பல கனவுகள், ஆக்கபூர்வமான கனவுகள் நிச்சயம் நிறைவேறும். சாதாரணப் பெண்ணான எனக்கு விதவிதமான ‘கார்’கள் குறித்தத் தகவல்களை ‘தோழி’ அறியத் தந்தாள்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

டிப்ஸ் அனைத்தும் எளிய ஏற்றமுள்ளவை. சாதனை நாயகியாம் பாப்பம்மாவுக்கு என் வாழ்த்து. செல்லுலாய்ட் பெண்கள் வரிசையில் ரஞ்சனியின் திரை வாழ்க்கை, நிஜ வாழ்க்கை மனதை பிழிந்தது.
- சு.கெளரிபாய், பொன்னேரி.

தெருவோரக் குழந்தைகளின் திறமையை தனிநபர் புரிந்து கொள்ள முடிகிறபோது அரசு அவரிக்ளை அலட்சியப்படுவதை படிக்க வேதனையாக இருந்தது.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

எதனோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்ற தலைப்பில் வந்த தகவல்கள் மிக மிக பயனுள்ளதாக இருந்தது.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

வானவில் சந்தையில் நவீன கார்களைப் பற்றிய கட்டுரை பிரமிக்க வைத்து விட்டது. கார்காலம் (மழைக்காலம்) சமயத்தில் இதனை வெளியிட்டிருக்கிறீரோ!
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.