டியர் டாக்டர்




*முதல் முறையாய் குங்குமம் டாக்டர் இதழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பக்கமும் அப்பப்பா என ஆச்சரியப்பட வைத்தது. இத்தனை நாட்கள் மிஸ் பண்ணிவிட்டோமே என்று வருத்தத்தையும் தந்தது. உளமார்ந்த பாராட்டுக்கள்!
- திருச்சிற்றம்பலம் சுரேஷ், திருக்கண்டேஸ்வரம்.

*ஐஸ்க்ரீம்... பேரைக்கேட்டாலே நாக்கில் உமிழ் சுரக்கும். அதை நீங்கள் கவர் ஸ்டோரியாக்கி, அதன் மூலம் விளையும் தீமைகளை எடுத்துக்காட்டி, உணர வைத்தது எங்களை ‘உருக’ வைத்து விட்டீர்கள்.

*வாட்டர் ஃபாஸ்ட்டிங் என்பது மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுமானால் புதுமையான விஷயமாக இருக்கலாம். நம் நாட்டில் பல்வேறு முறைகளில் பின்பற்றப்படும் விரத முறைதானே என்பதை நினைக்கும் போது பெருமையாக இருந்தது.

*ஸ்டான்லி மருத்துவமனையின் கவரேஜ் அதன் பெருமைகளையும், வசதிகளையும் புரிய வைத்தது. உங்களின் ‘ரவுண்ட்ஸ்’ மற்ற மருத்துவமனைகளிலும் தொடரட்டும்.
- சிம்மவாஹினி, வியாசர் காலனி.

*சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகளாக வெளிவரும் ஹெல்த் காலண்டர் ‘கொய்ட் இன்ட்ரஸ்டிங் அண்ட் இன்ஃபர்மேடிவ்’
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*உடல் பருமனை உண்டாக்கும் காரணிகள், அதனால் என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கி இருந்தது அழகே... என் ஆரோக்கியமே...
- வளர்மதி, திருச்சி.

*ஆன்டிபயாட்டிக் மருந்து, மாத்திரைகளைக் கையாளுவதில் மருத்துவர் தொடங்கி, மருந்து பொருட்கள் விற்பனையாளர், நோயாளிகள், அவரைச் சார்ந்தோர் எதையெதைப் பின்பற்ற வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என மிகத் தெளிவாக விளக்கி இருந்தார். எல்லோரிடமும் இந்த விழிப்புணர்வு பரவ வேண்டும்.
- கோமதி, வளசரவாக்கம்.   

*பாடாய்ப்படுத்தும் மூட்டு வலி பற்றி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்த தகவல்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். மூட்டு வலி வருவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தகுந்த படங்களுடன் விளக்கியது அருமை!
- பிரேம், விழுப்புரம்.