டியர் டாக்டர்




நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாலும், ஆழமான பல அறிவியல் காரணங்கள் ஒளிந்திருந்தன என்பது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயத்தின் மூலம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், சாம்பார் பற்றிய பல ரகசியங்களைப் பட்டியலிட்டு வியக்க வைத்தது ‘வெரைட்டி ரைஸுக்கு நோ சொல்லுங்க’ கவர் ஸ்டோரி.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

‘வெரைட்டி ரைஸ்’ கலாசாரம் எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதற்கு ஸ்பீட் பிரேக் போடுவது போல் இருந்தது தங்களுடைய கவர் ஸ்டோரி. இதுவரை பரவலாக விவாதிக்காத ஒரு விஷயத்தைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கி வைத்துவிட்டீர்கள். ‘பிடிமானம் நழுவுதா?!’ கட்டுரையில் சீனியர் சிட்டிசன்களின் கரங்களை இறுக்கமாகப் பிடித்து தூக்கிவிட்டதற்கும் பெரிய நன்றி!
 - சிம்மவாஹினி, வியாசர் நகர்.

‘சாம்பார் என்பது சைட் டிஷ் மட்டுமே அல்ல’ என்ற கட்டுரை சாம்பார் பிரியர்களைத் துள்ளிக்குதிக்க வைத்தது. சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகள் உட்பட்ட அனைத்து சேர்மானங்களுமே நம் உடலுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் நிரம்பிய மூலிகைக் குவியல் என்ற விபரங்களை அட்டவணைப்படுத்தியிருந்தது அட்டகாசம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆயுர்வேத மருத்துவர், ஆங்கில மருத்துவர் என்று இரண்டு எதிரெதிர் தரப்பினர் விவாதித்த ‘புத்தூர் கட்டு போடலாமா?!’ கட்டுரை சுவாரஸ்யம். மருத்துவ கட்டுரைகளை வாசிக்க வைக்கும் விதத்தில் நீங்கள் வழங்கும் விதம் பாராட்டுக்குரியது.ஒற்றைத் தலைவலியைத் தீர்க்க நீங்கள் தந்த தகவல்கள் மிகவும் பயனுடையதாய் இருந்தது. குங்குமம் டாக்டர்
இதழாசிரியருக்கு கோடானு கோடி நன்றிகள்!
- சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.

வயிற்றுவலிக்கான காரணம் தெரியாமல் இரவு நேரங்களில் அல்லல்படுபவர்களுக்கு, ‘அடிக்கடி வயிற்றுவலியா... அலர்ட் ஆகுங்கள்’ கட்டுரை உண்மையில் பயனுள்ள தகவல்களை தந்திருந்தது.
- எஸ்.பாஸ்கர், பெங்களூர்.

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...அடுத்த இதழில்!