நொறுக்குத்தீனிகளை கண்காணிக்க உத்தரவு



செய்திகள் வாசிப்பது டாக்டர்

நொறுக்குத்தீனி வகை உணவுகளில் அதிக கொழுப்புச்சத்து, சர்க்கரை, உப்பு சேர்க்கப்படுவதால் அதை சாப்பிடுவோருக்கு இதயக்கோளாறு, புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் உடல்நலத்துக்கு பாதிப்புகளை உண்டாக்கும் நொறுக்குத் தீனிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவி–்ட்டிருக்கிறது.

இதற்காக மருத்துவ நிபுணர்கள் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். ஆய்வு மேற்கொண்ட மருத்துவ குழுவினர், பல்வேறு காரணங்களின்அடிப்படையில் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்திருக்கிறது.

இந்த அறிக்கை சில விதிமுறைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. நொறுக்குத்தீனியில் 60 முதல் 70 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும், 10 முதல் 12 சதவிகிதம் புரதமும், 20 முதல் 30 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் இருக்கும் வகையில் கலோரிகள் சீரான சேர்க்கையில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

மேலும் டெலிவிஷன் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் நிகழ்ச்சிகளின்போது நொறுக்குத்தீனி தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது, கலோரிகளின் சதவிகிதம் தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாக்குவது, உற்பத்தி வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளையும் பரிந்துரைத்து இருக்கிறது.

- கௌதம்