மேல் மாடி காலியாவது இப்படித்தான்!



செக் - லிஸ்ட்

‘மூளையின் செயல்திறனைக் குறைக்கும் சில விஷயங்களை எப்போதும் செய்யக்கூடாது’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக, கீழ்க்கண்ட 7 விஷயங்களைச் செய்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

1. காலை உணவைத் தவிர்ப்பது...
2. இரவு தாமதமாகத் தூங்கச் செல்வது...
3. சர்க்கரை அதிக அளவுள்ள உணவு களை எடுத்துக் கொள்வது...
4. அதீத தூக்கம். முக்கியமாக காலை நேரத்தூக்கம்...
5. சாப்பிடும்போது தொலைக்காட்சி/ கம்ப்யூட்டர் பார்ப்பது அல்லது செல்போனை நோண்டுவது...
6. தூங்கும்போது தலைக்குத் தொப்பி/ஸ்கார்ஃப் கட்டிக் கொள்வது அல்லது சாக்ஸ் அணிந்துகொண்டே தூங்குவது...
7.இயற்கை உபாதைகளை அடக்குவது...
இந்த 7 தவறுகளையும் செய்யவில்லையென்றால் உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளலாம். செய்துகொண்டிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

- ஜி.ஸ்ரீவித்யா