மருத்துவர்களை ஏன் கொண்டாடுகிறோம்?



சல்யூட்

பிரபலமான இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர், தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக்கிடம் வந்தார். காரை பழுது பார்த்துக் கொண்டே மெக்கானிக் கேட்டார்.‘‘டாக்டர் ஒரு சந்தேகம். நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்... பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்... அடைப்பை சரி செய்கிறேன்... புதிய ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுகிறேன்...

நீங்களும் அதையேதானே செய்கிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்களை மட்டும் ஏன் மக்கள் கடவுள் போல கொண்டாடுகிறார்கள்?’’ என்று கேட்டார்.சில வினாடிகள் மௌனம் சாதித்த மருத்துவர், ‘‘நீங்கள் சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும்போது செய்து பாருங்கள்’’ என்றார்.மெக்கானிக்குக்கு உண்மை புரிந்துவிட்டது.

- முகநூலில் ரசித்தது