வாசகர்களுக்கு 2017 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !




ஒன்றல்ல... பல நன்றிகள் சொல்லியே ஆக வேண்டும்...‘கேன்சர் நோயல்ல... அது ஒரு வியாபாரம்’ என ‘நண்டு’ பிடியாக புதிய தகவல் திரட்டியமைக்கு ‘நன்றி. ‘புத்தம் புது காலை’ என்று அதிகாலையில் எழ வேண்டிய அவசியம் பற்றி கற்றுக்கொடுத்தமைக்கும் ‘நன்றி’. Frozen Food ஒரு Poison Food என சொல்லி சந்தேகம் தீர்த்தமைக்கும் நன்றி... மருந்து குழம்பை வீட்டில் எல்லோரும் விருந்து குழம்பாகவே சுவைத்திட பக்குவமாக எடுத்துக் காட்டியதற்கு நன்றி...            
- சிம்மவாஹினி, சென்னை- 39.

காது, மூக்கு, தொண்டை இம்மூன்றுக்கு மட்டும் ஏன் ஒரே டாக்டர் என்ற என் நீண்ட நாளைய சந்தேகத்துக்கு அத்துறையைச் சேர்ந்த டாக்டர் இளம்பரிதி வாயிலாக இனிய விளக்கத்தை வழங்கி உள்ளது குங்குமம் டாக்டர்!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

‘கேன்சர் நோயல்ல... வியாபாரம்’ கட்டுரையைப் படித்ததும் ‘உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும், கற்றான் கருதிச் செயல்’ என்ற திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது. கட்டுரையின் முடிவில் கூறியுள்ளது போல மருத்துவம் எதுவாக இருந்தாலும் அது வியாபாரமாக இல்லாமல் மக்களுக்கான சரியான மருத்துவமாக இருந்தால் சரிதான்!
- ஆதிரை, சூளைமேடு.

ஏ.சி... யோசி என்று டாக்டர் வினோத்குமார் சொன்ன தகவல்கள், ஏ.சி. போடாமலேயே பளீர்... ஜிலீர்!
- மயிலை, கோபி

‘அன்பால் இணைவோம்’ 100-க்கு 200% உண்மை. கணவன் - மனைவி இடையே கூட நல்ல புரிதல் இல்லை... அன்யோன்யம் இல்லை... எதிலும் ஆர்வம் இல்லாமல் உப்பு சப்பில்லாமலே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளும் யாரிடமும் ஒட்டாமல், பழகாமலேயே வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பக் கருவிகளைத் தொடர்புக்காக மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
- சி.டி.வேணுகோபால், சென்னை-94.