ITI முடித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் பயிற்சிப் பணி! 2562 பேருக்கு வாய்ப்பு!



வாய்ப்பு

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகப்பெரியதும் மற்றும் முக்கியமானதுமான ரயில்வே துறை, மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. அதன் கீழ் அலகாபாத், மும்பை, கொல்கத்தா, சென்னை என நாடு முழுவதும் உள்ள 21 முக்கிய நகரங்களில் ரயில்வே மண்டலங்கள் இயங்கிவருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் இம்மண்டலங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. அதன்படி மத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2,562 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இனி பார்க்கலாம்.

பணியிடங்கள்

ஃபிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயின்டர், டெய்லர், எலெக்ட்ரீஷியன், மெக்கானிக் டீசல், டர்னர், மெஷினிஸ்ட் என பலதரப்பட்ட துறைகளில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியில் சேரலாம்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியும், சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 1.1.2020 அன்றைய தேதியின்படி 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உச்சவயது வரம்பு அரசு விதிமுறைகளின்படி பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை


விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rrccr.com என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.1.2020.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினர் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அதே சமயம் SC / ST / PWD மற்றும் மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது. ஆன்லைன் வழியாக கிரெடிட்/டெபிட்/நெட் பேங்கிங் முறையிலோ அல்லது SBI வங்கி செலான் மூலமாகவோ விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும்.மேலும் முழு விவரங்களை அறிய www.rrccr.com என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.