ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ரயில்வேயில் பயிற்சிப் பணி !



வாய்ப்பு

4103 பேருக்கு வாய்ப்பு!


இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரயில்வே. ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்திய ரயில்வே துறையானது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மத்திய ரயில்வே போன்ற மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் சேவையை வழங்கிவருகிறது. இந்நிலையில் மத்திய தெற்கு ரயில்வேயில் (South Central Railway) ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வழங்கப்படும் பயிற்சிகள்: வெல்டர், ஃபிட்டர், கார்ப்பெண்டர், ஏசி மெக்கானிக், டீசல் மெக்கானிக், பெயின்டர், எலக்ட்ரீஷியன் என்பன போன்ற 12 தொழிற்பிரிவுகளின்கீழ் சுமார் 4103 பேர்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
கல்வித் தகுதி: இதில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் 50% மதிப்பெண்
களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அப்ரண்டீஸ் பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்போகும் தொழிற்பிரிவுகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 8.12.2019 அன்றின்படி விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதிற்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று வருடங்களும் வயது வரம்பில் தளர்வளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ-யில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100-ஐ செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 8.12.2019.
மேலும் அதிக தகவல்களுக்கு www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.  

-துருவா