உயர்கல்வி நிறுவனங்களில் MS, MBA படிக்க GMAT தேர்வு!



* தகுதித் தேர்வு

வெளிநாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் MS படிப்பிற்கும், MBA படிப்பிற்கும் மாணவர்களைத் தேர்வு செய்ய Graduate Management Admission Council என்ற நிறுவனத்தால் GMAT(Graduate Management Admission Test ) தேர்வு நடத்தப்படுகிறது. பொதுவாக வெளிநாடுகளில் MBA படிப்பில் சேரவே மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள். மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், மாஸ்டர் ஆஃப் ஃபைனான்ஸ் மற்றும் இவை தொடர்பான உயர் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய இத்தேர்வு நடத்தப்படுகிறது.

GMAT விண்ணப்பிக்கத் தகுதி விண்ணப்பிக்கத் தகுதி என்று குறிப்பிட்டு ஒன்றும் இல்லையென்றாலும், 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வரம்பு வயது இல்லை. 13 முதல் 17 வயதுள்ளவர்கள் இத்தேர்வை எழுத விரும்பினால் பெற்றோர்கள் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலர் அனுமதி வேண்டும். பொதுவாக எம்.பி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பிக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GMAT தேர்வு பற்றி

GMAT தேர்விற்கான நேரம் 3 மணி 30 மணித்துளிகள் ஆகும். இது ஒரு 10 பாயின்ட்ஸ் இன்கிரிமென்ட் தேர்வாகும்.

Section: Analytical Writing Assessment   
No fo Questions: 1 Topic
Type: Analysis of  Argument
Duration: 30 Minutes
   
Section: Integrated Reasoning
No fo Questions: 12 Questions
Type: Multi Source Reasoning Graphics Interpretation Two post Analysis Task Analysis
Duration: 30 Minutes

GMAT  தேர்விற்கு எவ்வாறு பதிவு செய்யலாம்?

இத்தேர்விற்கு 6 மாதத்திற்கு முன் அல்லது குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் பதிவு செய்ய இயலும். ஆன்லைன், போன், போஸ்டல் மெயில் என்று ஏதேனும் ஒரு வழியில் விண்ணப்பிக்கலாம். GMAT.mba.com என்ற இணையதளம் வாயிலாக, அதில் ஒரு கணக்கைத் தொடங்கி 250 யு.எஸ். டாலர் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை இருக்கும்.
GMAT மதிப்பெண்ணின் பயன்

GMAT தேர்வின் மதிப்பெண்களை மாணவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். GMAT ஸ்கோரை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ மாணவர்களுக்கு உரிமையுண்டு. மாணவர்கள் ஸ்கோரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, கல்வி நிறுவனங்கள் இந்த மதிப்பெண்ணை பார்க்க இயலும்.

GMAT ஸ்கோர் உலகம் முழுவதும் 114 நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏறத்தாழ, 7000 படிப்புகள், 2300 வணிகக் கல்லூரிகளில் GMAT அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி தரப்படுகின்றன. பல்வேறு ஊக்கத்தொகைகளையும் இக்கல்வி நிறுவனங்கள் தருகின்றன. ஹார்வார்டு, ஸ்டேன்ஃபோர்டு, இன்சீட் போன்ற கல்விநிறுவனங்களில் GMAT அடிப்படையில் இடம் தருகின்றன. சிறந்த இந்திய உயர்கல்வி நிறுவனங்களும் இத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குகின்றன.

GMAT தேர்வை வாழ்நாளில் 8 முறை மட்டுமே எழுத இயலும். அதே சமயம் ஓர் ஆண்டில் 5 முறைக்குமேல் எழுத இயலாது. தொடர்பிற்கு: https://www.mba.com, +81129 - 439-7830, 9 AM to 6 PM, Fax: +91-120-4001680 E-mail: GMATcardidate service-PAC@pearson.com

முனைவர் ஆர்.ராஜராஜன்

IIST கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை

இந்தியாவின் முக்கியத் துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ் டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம். இங்கு இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள் பி.டெக்.- ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் - 4 ஆண்டுகள், பி.டெக்.- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் (ஏவியானிக்ஸ்) - 4 ஆண்டுகள், பி.டெக். அண்ட் எம்.எஸ்./எம்.டெக். (டியூவல் டிகிரி) - 5 ஆண்டுகள்.

தேவையான தகுதிகள்

ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் -2019 தேர்வை எழுதியிருக்க வேண்டும். இதர விரிவான தகவல்களுக்கு கல்விநிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

குறிப்பு: இக்கல்வி நிறுவனத்தில் சிறப்பாக படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோ அமைப்பு நேரடிப் பணி நியமனத்தை வழங்குகிறது.

விண்ணப்பிக்கும் முறை : ஐ.ஐ.எஸ்.டி. கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 17.6.2019. மேலும் விவரங்களுக்கு: www.iist.ac.in