வெற்றிக்கு வழிகாட்டும் கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி!



இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் மிகவும் கடினமானது என்றால் அது இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுதான். இதில் வெற்றி பெறுபவர்கள், இந்திய அரசின் பல்வேறு சிவில் சர்வீஸ் பணிகளுக்கு அமர்த்தப்படுபவர். இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் என்று 24 சிவில் சர்வீஸ் பணிகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வு பிரிலிமினரி தேர்வு (முதல் நிலைத் தேர்வு), மெயின்ஸ் தேர்வு (இரண்டாம் நிலைத் தேர்வு), இறுதித் தேர்வு (பெர்சனாலிட்டி டெஸ்ட் அல்லது நேர்முகத் தேர்வு) என மூன்று கட்டமாக நடைபெறும்.

அதே சமயம் சிவில் தேர்வுகளுக்கு தயாராவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. சிவில் தேர்வுகள் தனக்கென பிரத்யேக தயாரிப்பு முறைகளை கோருவதால் மாதங்களில் ஆரம்பித்து வருட கணக்கில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். என்னதான் பயிற்சி பெற்றாலும் தரமான பயிற்சி நிறுவனங்களின் வழிகாட்டலும், முன்னாள் அதிகாரிகளின் அறிவுரைகளும் இன்றியமையாததாக உள்ளன. அவ்வாறு தரமான பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சிகளை வழங்கி ஒவ்வோர் ஆண்டும் பல திறமையான சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்கி வரும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சத்யஸ்ரீ பூமிநாதன் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…  
 
‘‘சிவில் சர்வீஸ் அதிகாரிகளால்தான் ஒரு மாணவனுக்கு தரமான ஐ.ஏ.எஸ் பயிற்சி அளிக்க முடியும் என்பதை உணர்ந்து, முழுக்க முழுக்க சிவில் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டது கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி. பணியில் உள்ள மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ்., ஐ.ஆர்.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகளால் இம்மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. சிறந்த சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி மையத்துக்கான தமிழக அளவிலான விருதை இருமுறை எங்கள் நிறுவனம் பெற்றிருப்பது தரமான பயிற்சிக்குச் சான்று. இம்மையத்தில் பயிற்சி பெற்ற பலரும் மத்திய மாநில அரசுப் பணிகளில் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு UPSC தேர்வில் தமிழகத்தில் இருந்து ேதர்ச்சி பெற்ற 35 மாணவர்களில் 21 பேர் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயின்றவர்களாவர்.

தமிழக அளவில் முதலிடம் பெற்ற C.A. ரிஷப், இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர். இந்தியாவின் முதல் பார்வை இழந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி என்.எல்.பினோ ஜெபின், தாய்மொழியான தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றிபெற்ற ஏ.மணிகண்டன் மற்றும் முதல் முயற்சியிலேயே மாநிலத்தில் முதலிடம் பெற்ற பிரதாப் ஆகியோர் இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே 200-க்கும் மேற்பட்ட சிவில் அதிகாரிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி’’ என்று பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் சத்யஸ்ரீ  பூமிநாதன்.

‘‘திறன் மிகுந்த மாணவர்களை உத்வேகப்படுத்தும் பொருட்டு 100% ஸ்காலர்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி.  பொதுஅறிவுத் தேர்வு மற்றும் திறனாய்வுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஸ்காலர்ஷிப்பின்படி தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய தன்னம்பிக்கை மிக்க மாணவர்கள் தனி அடையாளம் பெறுகின்றனர். எந்த செலவும் இல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சியும் அவர்களுக்கு கிடைக்கிறது.’’ என்று கூறும் சத்யஸ்ரீ  பூமிநாதன் அகாடமியில் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றியும் தெரிவித்தார்.

‘‘டிகிரி முடித்த இளைஞர்கள், சிவில் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில்  பதினெட்டு மாத அளவிலான UPSC INTENSIVE PROGRAMME, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், டிகிரி படித்துக்கொண்டே சிவில் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் UPSC INTEGRATED PROGRAMME மேலும் ஆன்லைன் மற்றும் குறுகியகால பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஹைடெக் கிளாஸ் ரூம், தரமான உட்கட்டமைப்பு வசதி என சிறப்பான சூழலில் தரமான ஐ.ஏ.எஸ். பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. மேலும் சேவை மனப்பான்மையுடன்கூடிய அனுபவமிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்படுவது என்பது கூடுதல் சிறப்பு. தேர்வுகளுக்கு தேவையான அப்டேட்டட் ஸ்டடி மெட்டீரியல்கள் மற்றும் சிவில் தேர்வு எழுதும் அனைவரும் பயன்படுத்தும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் செல்போன் செயலி (APP)  ஆகியன மாணவர்கள் எளிமையாக தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்கின்றன.

நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் APP-ல் பதிவேற்றுதல், தினமும்  20 வகையான அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக ஓவ்வொரு வாரமும் தனியாக நேரம் ஒதுக்குதல் என பிரத்யேக செயல்பாடுகள் மூலம் தேர்வுகளில் நடப்பு நிகழ்வு சார்ந்த கேள்விகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துகிறது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழியில் ஸ்டடி மெட்டீரியல் வடிவமைத்து மாணவர்களை தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதச் செய்து முன்னோடியாக செயல்படுகிறது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி.

நாங்கள் வழங்கும் தரமான பயிற்சியைக் கருத்தில் கொண்டுதான் ‘‘தற்போது பணிபுரிந்து வரும் சிவில் அதிகாரிகள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், சேவைமனப்பான்மையுடனும் செயல்படுவதாக கேள்விப்படுகிறேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் அடிப்படை வசதி இல்லாத கிராமங்களிலிருந்தும், மிகவும் பின்தங்கிய பொருளாதாரநிலை உள்ள குடும்பங்களிலிருந்தும் வருகின்றனர் என்பதையும் அறிகிறேன். இவர்களை போன்று எளிய பின்னணி உள்ள இளைஞர்களுக்கு தரமான பயிற்சி அளித்து, வழிகாட்டி, சிவில் தேர்வுகளுக்கு தயார்செய்துவரும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் செயல்பாடுகள் பாராட்டப்படவேண்டியது’’ என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்கிறார் சத்யஸ்ரீ  பூமிநாதன்.   

-வெங்கட்