10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BRO-ல் வேலை!



* வாயப்பு
* 778 பேருக்கு வாய்ப்பு!


எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். இது சுருக்கமாக BRO (Border Roads Organisation) என்று அழைக்கப்படுகிறது. பொது சேமப் பொறியாளர் படையிலிருந்து எல்லைப்புறச் சாலைகள் பொறியியல் பணி அதிகாரிகளும், இந்தியத் தரைப்படையிலிருந்து தரைப்படை பொறியாளர்களும் சேர்ந்து இவ்வமைப்பு செயல்படுகிறது.

இந்திய எல்லைகளில் உள்ள சாலைகளைப் பாதுகாக்கவும், எல்லைப்புறச் சுரங்கப் பாதைகளை அமைக்கவும் இவ்வமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இவ்வமைப்பு பொருளாதாரப் பின்னடைவுள்ள வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் சாலை வசதி அமைக்கிறது. இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் சாலைகளை அமைக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட், எலக்ட்ரீஷியன், வெஹிகிள் மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 778 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் டிரைவர் பணிக்கு 388, எலக்ட்ரீஷியன் பணிக்கு 101, வெஹிகிள் மெக்கானிக் பணிக்கு 92, மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு 197 இடங்களும் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், மெக்கானிக், எலக்ட்ரீஷியன் சான்றிதழ் பெற்றவர்கள் அந்தந்த பணிகளுக்கும், டிரைவர் லைசென்சு பெற்றவர் டிரைவர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாக 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பி.சி. பிரிவினர் ஆகியோர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.7.2019.

இதுபற்றிய மேலும் விரிவான விவரங்களை http://www.bro.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம்.