அயல்நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள GRE தேர்வு!*தகுதித் தேர்வு

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் M.S. - Master of Science உயர் படிப்புகள், அமெரிக்கா உள்ளிட்ட பல்ேவறு அயல்நாடுகளில் M.B.A (Master of Business Administration) படிப்புகளில் உலகத்தரம் வாய்ந்த கல்லூாிகளில் சேர தகுதியுள்ள மாணவர்களைத் தேர்வு செய்யும்   GRE (Graduate Record Examination) தேர்வை, எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (ETS-Educationel Testing Service) என்ற நிறுவனம் நடத்துகிறது.

இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும், 160 நாடுகளில் 1000 தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. அரை மில்லியனுக்கும் மேலான மாணவர்கள் இத்தேர்வை,  எழுதுகிறார்கள். GRE மதிப்பெண்கள் அடிப்படையில், உலகம் முழுமையிலும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளுக்கும், முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கும், முனைவர் படிப்புகளுக்கும் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.

GRE தேர்வை யார் எழுதலாம்?

அயல் நாடுகளில் உயர் படிப்பை கற்க விழையும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வை எழுத இந்தியாவில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்து, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த வயது நிரம்பியவர்களும் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

GRE தேர்விற்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

GRE தேர்விற்கென்று ஒரு குறிப்பிட்ட தேதியில்லை. தங்கள் வசதிக்கேற்ப, கிடைக்கும் தேர்வு நேரத்திற்கேற்ப விண்ணப்பித்துக்கொள்ளலாம். தேர்விற்கு இரண்டு மாதம் முன்பு விண்ணப்பிக்க வேண்டும். ஒருமுறை பதிவு செய்தபின், இந்தத் தேதியை தேவையானால் இதற்கான கட்டணமான 50 டாலரை செலுத்தி மாற்றிக்கொள்ள இயலும்.
இந்தியாவில் GRE தேர்வு மையங்கள் புதுடெல்லி, குர்கான், மும்பை, நாசிக், புனே, அலஹாபாத், பாட்னா, அஹமதாபாத், காந்திநகர், இந்தூர், கொல்கத்தா, கொச்சின், சென்னை, பெங்களூரு, விஜயவாடா, வதோதரா, திருவனந்தபுரம், நிசாமாபாத், ஹைதராபாத், குவாலியர், டேராடூன், கோயம்புத்தூர் என பல இடங்களில் உள்ளன.

GRE தேர்வு எப்படியிருக்கும்?

GRE-யில் இரண்டு தேர்வுகள்.
1) GRE பொதுத்தேர்வு (GRE - General Test)
2) GRE பாடத்தேர்வு  (GRE - Subject Test)

வெவ்வேறு துறைகளில் அமெரிக்கா இன்னும் பல்வேறு நாடுகளில் M.S. படிக்க விரும்புபவர்கள் பொதுத்தேர்வை எழுத வேண்டும். ஆண்டு முழுவதும் நடைபெறும் இத்தேர்வு, மாணவர்களின் அனாலிட்டிக்கல் ரைட்டிங் ஸ்கில்ஸ் (Analytical Writing Skills) மற்றும் வெர்பல் ரீசனிங் ஸ்கில்ஸ் (Verbal Reasoning Skills) ஆகியவற்றை சோதிப்பதாக அமையும். GRE பாடத்தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்களின் திறமையை சோதிப்பதற்கானதாகும். கணிதம் (Mathematics), ஆங்கில இலக்கியம் (English Literature), இயற்பியல் (Physics), உளவியல் (Pschology), உயிரியல் (Biology), வேதியியல்  (Chemistry), செல், மூலக்கூறு உயிரியல் உள்ளிட்ட உயிர்வேதியல் (Biochemistry) போன்ற பாடங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

பொதுவாக இத்தேர்வு கணினி மூலமாகவும் மற்றும் எழுத்துத் தேர்வாகவும் (Computer and Paper) நடத்தப்படுகிறது. பாடத்தேர்வு தாள் வழியாக மட்டுமே நடத்தப்படும் தேர்வு ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர் என்ற மூன்று மாதங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. அனாலிட்டிக்கல் ரீசனிங் (Analytical Reasoning), வெர்பல் ரீசனிங் (Verbal Reasoning) குவாண்டிட்டேட்டிவ் ரீசனிங் (Quantitative Reasoning) என்ற மூன்று பகுதிகளைக்கொண்ட இத்தேர்விற்கான காலம், 3 மணி 45 நிமிடங்களாகும்.

மதிப்பெண் பற்றி...

Section                                           Score Range    Mean
Verbal Reasoning                            130-170          150
Quantitative Reasoning                  130-170           152
Analytical Reasoning                        0-6                 3-6

Total    260-340    

GRE மதிப்பெண்கள், வலைத் தளத்தில் வெளியிடப்படும். ETS-யிடமிருந்து மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்தந்த பல்கலைக்கழகத்திற்கும் ஸ்கோர் அனுப்பப்படும்.

GRE தேர்விற்கு எவ்வாறு பதிவு செய்வது?

GRE தேர்விற்கு பதிவு செய்ய பல வழிகள் இருப்பினும் (https://www.ets.org) ஆன்லைனில் விண்ணப்பித்தலே சிறந்தது. முதலில் ETS கணக்கை ஆன்லைனில் தொடங்கி, பொதுத்தேர்வு அல்லது பாடம் சார்ந்த தேர்வை தேர்வு செய்துகொள்ள வேண்டும். தேர்வு தேதி, தேர்வு எழுதும் இடம் இவற்றை குறிப்பிட்டு, பின் இதற்கான கட்டணமான 205 டாலரை செலுத்த வேண்டும்.

 கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் : 205 டாலர் (ஏறத்தாழ இந்திய பணத்தில் ரூ.13,500 - 14,500)

பாடத்தேர்வு : 150 டாலர் (ஏறத்தாழ இந்திய பணத்தில் ரூ.10,000  11,000)

தாமதக் கட்டணம் : 25 டாலர்

ஸ்டேன்ட்பை டெஸ்ட் : 25 டாலர்

ரீஷெட்டில் : 50 டாலர்

தேர்வு மைய மாற்றம் : 50 டாலர்

தொடர்பிற்கு: 91-1244517127 or 000-800-100-4072 (toll free for test takers in India). Monday - Friday, 9 a.m. to 5 p.m. India Standard Time (except for local holidays) e-mail: GRESupport4India@ets.org

முனைவர் ஆர்.ராஜராஜன்