ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு DRDO-ல் வேலை!* வாய்ப்புகள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation - D.R.D.O) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் அமைந்துள்ளது. இது 1958-ல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன.

இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிலும் உள்ளது. உதாரணமாக வானூர்தியியல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனிதவள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற நமது ராணுவத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் தொடர்பான பல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் டி.ஆர்.டி.சி. பிரிவில் டெக்னீசியன் ‘ஏ’ பிரிவிலான 351 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விவரம்: ஆட்டோமொபைலில் 3, புக் பைண்டரில் 11, கார்பென்டரில் 4, கோபாவில் 55, மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 20, டி.டி.பி., ஆப்பரேட்டரில் 2, எலக்ட்ரீசியனில் 49, எலக்ட்ரானிக்சில் 37, பிட்டரில் 59, மெஷினிஸ்டில் 44, டீசல் மெக்கானிக்கில் 7, மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் 4, மோட்டார் மெக்கானிக்கில் 2, பெயிண்டரில் 2, போட்டோகிராபரில் 7, ஷீட் மெட்டல் ஒர்க்கரில் 7, டர்னரில் 24, வெல்டரில் 14 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாகப் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருப்பது தேவைப்படும். முழுமையான விவரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

வயது வரம்பு: 18 முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்ச்சி முறை : டயர் 1ல் கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு, டயர் 2ல் டிரேடு தேர்வு என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.6.2019.

மேலும் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_20_1920b.pdf >