பிர்லா கல்விநிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (The Birla Institute of Technology and Science - BITS)  நிகர்நிலைப் பல்கலைகழகம் இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்று. இக்கல்வி நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவின்  ராஜஸ்தான், கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களிலும் மற்றும் துபாயிலும் இயங்கி வருகின்றன.

பொறியியல், அறிவியல், வணிகம் சார்ந்த சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பக் கல்வியை வழங்கி வரும் இக்கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ள  2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது.


வழங்கப்படும் படிப்புகள்

Chemical, Civil, Electronics & Instrumentation, Computer Science, Electrical and Electronics,  Mechanical, Manufacturing போன்ற எஞ்சினியரிங் படிப்புகள், B.Pharm இளங்கலைப் படிப்பு மற்றும் M.Sc in Biological  Sciences, Chemical, Economics, Mathematics, Physics போன்ற  முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

இக்கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். மேலும் மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களடங்கிய பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி  பெற்றிருத்தல் அவசியம்.

உயர்கல்வியில் கணிதம் மற்றும் உயிரியல் துறைகளைத் தேர்ந்தெடுக்க விரும்புவர்கள் மேற்கூறிய பாடங்களில் 75% மதிப்பெண்கள் பெற்றிருத்தல்  வேண்டும். 2018ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் 2019 ஆண்டில் தேர்வு எழுத இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க  தகுதியுடையவர்களாவர்.

நுழைவுத்தேர்வு

விண்ணப்பதாரர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் BITSAT-2019 நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாடின் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரு நகரங்களில் கணினி முறையில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.bitsadmission.com என்ற இணையதளம் சென்று ஆண்கள் ரூ. 3,150 மற்றும் பெண்கள்  ரூ.2650 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20.3. 2019. மேலும் முழுமையான விவரங்களை  http://www.bitsadmission.com என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

- துருவா