வேலை ரெடி



வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும்  இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில்  வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

போதை தடுப்புத்   துறையில் அதிகாரி பணி!

நிறுவனம்: நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ எனும் மத்திய அரசின் போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு

வேலை: ஜூனியர் இன்டலிஜன்ஸ் ஆஃபிசர் நுண்ணறிவு அதிகாரி பணி

காலியிடங்கள்: மொத்தம் 166

கல்வித் தகுதி: தொடர்புடைய வேலையில் பட்டப்படிப்பு

வயது வரம்பு: 56-க்குள் விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜனவரி இறுதி வாரத்துக்குள் மேலதிக தகவல்களுக்கு: www.narcoticsindia.nic.in

எய்ம்ஸ் மருத்துவமனையில்  சீனியர் ரெசிடெண்ட் பணி!  

நிறுவனம்: எய்ம்ஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு மையம், புவனேஸ்வர் கிளை

வேலை: சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவர் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 124. இதில் சீனியர் ரெசிடெண்ட் வேலையில் 123 காலியிடங்கள். ஒரு காலியிடம் போஸ்ட் டாக்டோரல் ஃபெல்லோஷிப்புக்கானது

கல்வித் தகுதி: மருத்துவப் படிப்பில் முதுகலை

வயது வரம்பு: சீனியர் ரெசிடெண்ட் பணிக்கு 37, போஸ்ட் டாக்டோரல் ஃபெல்லோஷிப்புக்கு 45.

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.1.19

மேலதிக தகவல்களுக்கு:  www.aiimsbhubaneswar.nic.in

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணி!

நிறுவனம்: இண்டியன் ஏர்ஃபோர்ஸ் எனும்  இந்திய விமானப்படை

வேலை: குரூப் x, y எனும் இரு பிரிவுகளில் ஏர்மேன் வேலையும் குரூப் Y-ல் மெடிக்கல் அசிஸ்டென்ட் வேலையும்

காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை

கல்வித் தகுதி: மூன்று வேலைகளுக்குமே +2 படிப்பு. ஆனால் முதல் மற்றும் மூன்றாம் வேலைகளுக்கு +2 படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு:19.1.99 முதல் 1.1.2003-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.1.19

மேலதிக தகவல்களுக்கு: www.davp.nic.in

இ.எஸ்.ஐ. மருத்துவ மனைகளில் வேலை!

நிறுவனம்: இ.எஸ்.ஐ.சி எனப்படும் எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மருத்துவமனைகள்

வேலை: ஸ்டாஃப் நர்ஸ், லேப் அசிஸ்டென்ட், லேப் டெக்னிஷியன், ஃபார்மசிஸ்ட், ஓ.டி. அசிஸ்டென்ட், டையட்டீஷியன் மற்றும் மேலும் சில மருத்துவத் துறைகளில் வேலை
காலியிடங்கள்: இந்தியா முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளுக்கான வேலைவாய்ப்பு மொத்தம் 2,255 அறிவிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டுக்கான இடஒதுக்கீடு 111 இடங்கள்

கல்வித் தகுதி: +2 படிப்பும், பணியிடங்களுக்கு தொடர்புள்ள துறைகளில் டிப்ளமோ படிப்பு அல்லது டிகிரி முடித்திருக்கவேண்டும்

வயது வரம்பு: ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு மட்டும் 37 வயதுக்குள். மற்ற வேலைகளுக்கு 32க்குள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.1.19

மேலதிக தகவல்களுக்கு: www.esichennai.org

தமிழக அரசில் அதிகாரி பணி!

நிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை: டெப்யூட்டி கலெக்டர், டி.எஸ்.பி. உட்பட 8 பிரிவுகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

காலியிடங்கள்: மொத்தம் 139. இதில் டெப்யூட்டி கலெக்டர் 27, டி.எஸ்.பி 56, உதவி கமிஷனர் 11, துணைப் பதிவாளர்(கூட்டுறவு), மாவட்ட பதிவாளர் 7, உதவி இயக்குநர்(கிராம வளர்ச்சி) 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 8 மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி 2 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

வயது வரம்பு: உதவி கமிஷனர் வேலைக்கு மட்டும் 32 வயதுக்குள். மற்ற வேலைகளுக்கு 21 முதல் 37 வயது வரை. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.1.19

மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

எல்லைக் காவல் படையில் மருத்துவர் பணி!

நிறுவனம்: பி.எஸ்.எஃப். எனப்படும் இந்திய துணை ராணுவப்படையான எல்லைக் காவல்படை

வேலை: 2 பிரிவுகளில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. சிறப்பு மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவ அதிகாரி. 2. கான்ஸ்டபிள் பதவியிலான விளையாட்டு வீரர்களுக்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் வேலை. இந்த இரண்டாம் பிரிவு வேலைகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

காலியிடங்கள்: முதல் பிரிவில் 79 இடங்களும் இரண்டாவது பிரிவில் 63 இடங்களும் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: முதல் பிரிவில் உள்ள வேலையில் சிறப்பு மருத்துவ வேலைக்கு டிப்ளமோ படிப்பும், பல் மருத்துவத்துக்கு பி.டி.எஸ். படிப்பு, பொது மருத்துவத்துக்கு எம்.பி.பி.எஸ். படிப்பும் படித்திருக்கவேண்டும். இரண்டாவது பிரிவு வேலைகளுக்கு 10வது படிப்புடன் விளையாட்டுகளில் தேர்ச்சி

வயது வரம்பு: முதல் பிரிவு வேலைகளுக்கு 67 வயதுக்குள். இரண்டாவது பிரிவு வேலைகளுக்கு 23 வயதுக்கு உட்பட்டவர்கள்

தேர்வு முறை: முதல் பிரிவு வேலைகளுக்கு நேர்காணல். இரண்டாம் பிரிவு வேலைகளுக்கு விளையாட்டுத் துறையில் சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: இரண்டு பிரிவு வேலைகளுக்கும் 17.1.19க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in  

இந்திய கடற்படையில் அதிகாரி வேலை!

நிறுவனம்: இண்டியன் நேவி எனப்படும் இந்திய கடற்படை

வேலை: கமிஷண்ட் ஆஃபிசர்

காலியிடங்கள்: 99

கல்வித் தகுதி: பி.இ. அல்லது பி.டெக். படிப்பு

வயது வரம்பு: 2.1.95 - 1.7.2000-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.2.19

மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்