அக்ரிகல்சர் படித்தவர்களுக்கு அரசுப்பணி!



வாய்ப்பு

500 பேருக்கு வாய்ப்பு!


தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC என்று சொல்லப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசில் காலியாக இருக்கும் அசிஸ்டென்ட் அக்ரிகல்சுரல் ஆபிசர் பணியிடங்கள் 576 மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான 4 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் அக்ரிகல்சர் பிரிவில் டிப்ளமோ படிப்பைத் தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இந்த டிப்ளமோ படிப்பு இரண்டு வருடத்திற்கானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட தகுதியை விட அதிக தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியறிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 18 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம்: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in , www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற இணையதளங்களில் ஏதவது ஒன்றில் ஒருமுறை பதிவு செய்யும் நிரந்தரப்பதிவுக்கு ரூ.150-ஐ டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் கிரெடிட், டெபிட், நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். பிறகு மேற்கண்ட பதவிக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

எஸ்.சி., எஸ்.டி. மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.1.2019

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை ஆகிய மையங்களில் இதற்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in/notifications/2018_39_notyfn_AAO.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

- முத்து