AIIMS-ல் MBBS,BDS படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா?



அட்மிஷன்

நாம் அனைவரும் சுருக்கமாக AIIMS (All India Institute of Medical Sciences) என்று அழைக்கும் மருத்துவக் கல்வி நிறுவனம், இண்டியன் மெடிக்கல் கவுன்சில் விதிகளுக்குட்பட்டு, இந்தியப் பாராளுமன்ற சட்டத்தின்படி இயங்கும் தன்னாட்சி நிறுவனமாகும்.இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், தெற்காசியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவ வசதியையும் கல்வியையும் தரும் அமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பிய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நியூசிலாந்து அரசின் நிதியுதவியுடன் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1952ல் அடிக்கல் நாட்டினார். 1956ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒரு சுயேச்சையான நிறுவனமாக எய்ம்ஸ் செயல்பட ஆரம்பித்தது.இந்தியாவின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிகள் நாட்டியவர் நேரு.

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை உருவாக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், பிஹார், சதீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய இடங்களில் 2012 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன.

AIIMS மருத்துவக்கல்வி நிறுவனம் MBBS, B.Sc  Honours, B.Sc Post Basic, B.Sc., Honours in Medical Technology in Radio Graphy, Bachelor of Optometry என்ற இளநிலைப் பட்டப்படிப்புகளையும், M.D/MS/ Mc.High, MD Hospital Administration, MDS, M.BioTech, MSS ஆகிய முதுநிலைப் படிப்புகளையும், DM, Mch, Fellowship Programme ஆகிய முதுநிலை படிப்புகளையும், முனைவர் (Ph.D) படிப்புகளையும் தருகிறது. தற்போது AIIMS -ல் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கான, முதல்நிலை பதிவிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது கல்வி நிர்வாகம்.

  வழக்கமாக இருந்ததைப்போல் இல்லாமல் இம்முறை AIIMS நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. AIIMS மருத்துவக் கல்விநிறுவனங்கள் புதுடெல்லி, பத்தின்டா, போபால், புவனேஸ்வர், டியோகார்ஹ், கொரக்பூர், ஜோத்பூர், கல்யாணி, மனகால்கிரி, நாக்பூர், பாட்னா, ரெய்ப்பூர், ரேபெரெலி, ரிஷிகேஷ், தெலங்கானா என 15 இடங்களில் உள்ளன. இவற்றில் உள்ள MBBS இடங்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வு வழியாக நிரப்பப்படு கின்றன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க AIIMS Prospective Applicants Advanced Registration (PAAR) என்ற இருநிலை முறையை அறிமுகம் செய்துள்ளது. அவை...

1) அடிப்படைப் பதிவு - (Basic Registration)
2) இறுதிப் பதிவு - (Final Registration) என்ற இரு நிலைகளாகும்.

  முதலில் AIIMS எழுத விரும்பும் மாணவர்கள் முதல் நிலையில் அடிப்படை விவரங்களைத் தந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பின் இறுதிப் பதிவை மேற்கொள்ள வேண்டும். இறுதிப் பதிவு செய்த பின்தான் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.முதல்நிலையில் உள்ள அடிப்படைப் பதிவு என்பது அடிப்படை விவரங்களை பதிவிட்டு, புகைப்படம் அப்லோட் செய்வது, கையொப்பம் பதிவு, இடது கட்டை விரல்  மை பதிவு இவையாகும். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை.

இறுதிப் பதிவு என்பது, கோட் (Code) ஜெனரேட் செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது, தேர்வு மையத் தேர்வு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பதிவிறக்கம் உள்ளிட்டவையாகும்.

நினைவில் நிறுத்த வேண்டிய நாட்கள்
Basic Registration (Paar)   :   
Start: 30.11.2018 -  Close: 3.1.2019 (5 PM)
 Status update:  7.1.2019
Correction in Basic Registration   :  
8.1.2019  to 18.1.2019
Final Status of Basic Registration  :  22.1.2010
Uploading prospectus   :  29.1.2019
Generator of code Fee Payment, Centre Choice :  
29.1.2019   to  17.2.2019 (5PM)
 Admit Card :  15.5.2019
தேர்வு விவரங்கள்
Date of Exam : 25.5.2019 (Saturday)
         : 26.5.2019 (Sunday)
 Time    :  I Shift  (Each Day)
    9.00 AM   to  12.30
    II Shift (Each Day)
    3.00 PM  to   6.30

மேலும் முழுமையான விவரங்களை www.aiims.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரி பணி!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை இந்த அமைப்பு நிரப்பிவருகிறது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக அதிகாரி (கிரேடு-4) பணிக்கு 65 பேர், கிரேடு-3 நிர்வாக அதிகாரி பணிக்கு 55 பேர் என மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித் தகுதி: கிரேடு-4 பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனத்தில் படித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்
கலாம்.கிரேடு-3 பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: கிரேடு-4 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.7.2018-ம் தேதியில் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. வயது வரம்புத் தளர்வு பெறும் பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

கிரேடு-3 பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் 1.7.2018-ம் தேதியில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் புதிதாகப் பதிவு செய்வதாக இருந்தால், ரூ.50 செலுத்தி ஒண்டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்துவிட்டு, பிறகு ரூ.150 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். முன்பே பதிவு செய்தவர்கள் தேர்வுக் கட்டணம்(ரூ.150) மட்டும் செலுத்தினால் போதும். தேர்வுக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.12.2018.

தேர்வு செய்யும் முறை: கிரேடு-4க்கு எழுத்துத் தேர்வு 17.2.2019-ம் தேதி நடைபெற உள்ளது. கிரேடு-3க்கு எழுத்துத் தேர்வு 16.2.2019-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்