இங்கிலாந்தில் படிக்க இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை!



ஸ்காலர்ஷிப்
 
இங்கிலாந்தில் உள்ள காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன்(CSE) பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ‘Commonwealth Master’s Scholarships (for low and middle income Commonwealth countries), Commonwealth Ph.D Scholarships (for low and middle income Commonwealth countries) என இரு விதமான உதவித்தொகை திட்டங்களை அறிவித்துள்ளது.

காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற பிரிட்டனின் முன்னணி பல்கலைக்கழகங்கள், கல்விநிறுவனங்களில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் போன்ற உயர்கல்வி சார்ந்த படிப்புகளில் சேர உரிய தகுதி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்திய மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து போன்ற பகுதிகளில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். CSE அமைப்பு ஸ்காலர்ஷிப் மற்றும் ஃபெல்லோஷிப்பை ஆண்டுதோறும் வழங்கி சர்வதேச கல்லூரிகளில் உலகத் தரமான கல்வி பெற ஊக்கப்படுத்துகிறது. அதன்படி இவ்வாண்டுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

கல்வித் தகுதி

முதுநிலை படிப்பிற்கு, மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகள் சார்ந்த பிரிவில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் இளங்கலைப் பட்டமும், பிஎச்.டி படிப்பிற்கு தேர்ந்தெடுத்த துறை சார்ந்த பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் இந்தியக் குடியுரிமை பெற்றவர் மட்டுமே விண்ணப் பிக்க இயலும். ஏற்கனவே வெளிநாட்டில் உயர்கல்வி, பயிற்சிஅல்லது பிற உதவித் தொகையால் படித்தவர்என்றால் குறைந்தது இரண்டு வருடம் இடைவெளியின்றி இந்தியாவில் இருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் http://proposal.sakshat.ac.in/scholarship/ என்ற இந்தியாவின் மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் வலைத்தளத்தில் 2019 ஜனவரி 10ம் தேதிக்குள்ளும் மற்றும் https://fs29.formsite.com/m3nCYq/form62/form_login.html என்ற காமன்வெல்த் ஸ்கார்ஷிப் கமிஷனின் இணையதளத்தில் 2010 டிசம்பர் 19-க்குள்ளும் என இரண்டு தளங்களிலும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

மாணவர்கள் தாங்கள் முந்தைய படிப்பில் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பித்த படிப்பு, மாணவர்களின் பொருளாதார நிலை மற்றும் சேர்க்கை பெற்ற கல்விநிறுவனங்களின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கபடுவர்.மேலும் முழுமையான விவரங்களுக்கு http://mhrd.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-வெங்கட்.