Advice Vs Advices



மொழி

(What you are seeking is seeking you)

“I am unable to listen to my mother’s advices sir. She keeps on advising me sir. Don’t know what to do?” என்றபடியே சலிப்புடன் வந்தமர்ந்த ரவியை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார் ரகு. உடனே, “என்னங்க சார்! நீங்களும் ஏதாவது அட்வைஸ் குடுக்கப் போறீங்களா?” என்றான் ரவி. “இல்ல ரவி! நான் யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை unless otherwise warranted. ஆனாலும் தவறாகப்பட்டால் அதைச் சொல்லிவிடுவேன்.  உதாரணமாக, இப்ப நீ சொன்னியே,  a lot of advices என்று அது தவறு” என்றார்.  

“அதுல என்னங்க சார் தப்பு. Advice-ன்plural, advices தானே” என்று சொல்லியபடி வந்தமர்ந்தாள் அகிலா.“இல்ல அகிலா. அட்வைஸ் என்பது ஒரு அப்ஸ்ட்ராக்ட் நவ்ன். ஒருமை பன்மை இரண்டிற்கும் ஒரே வார்த்தைதான். The only thing people have in abundance to give or donate others is ‘advice’.

(மக்கள் மானாவாரியா அள்ளிக் கொடுக்க வச்சிருக்கிற அளவில்லா சொத்து அறிவுரை மட்டும்தான்) The elders never hesitate to deliver a lot of advice to the youngsters. (இளைஞர்களுக்கு அதிகமாக அறிவுரைகள் அள்ளி வழங்க முதியவர்கள் என்றும் தயங்குவதில்லை.) எனவே, அறிவுரை மற்றும் அறிவுரைகளுக்கு ‘அட்வைஸ்’ என்ற ஒரே வார்த்தை போதும். ‘அட்வைஸஸ்’ என்ற வார்த்தைக்கு ‘அறிவுரைகள்’ என்று பொருள் கிடையாது.” என்றார் ரகு.

“Seems quite strange sir! Then what is the meaning for ‘advices’ sir” எனக் கேட்டான் ரவி. அப்போது தபால் அலுவலர் உள்ளே  வந்து ஒரு கவரை ரகுவிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த ரகு மௌனமாகப் புன்னகைத்தபடியே, “ரவி! What you are seeking is seeking you என்பார்கள். அது சரிதான். இங்க பாரேன். இந்த கடிதம் பேங்க்ல இருந்து வந்திருக்கு. The bank has sent credit advices. Advices என்பது an official notification, mostly financial. அவ்வளவுதான்” என்றார்.

“அது சரிங்க சார். advice & advise  இரண்டும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறா?” என்று கேட்ட ரவியிடம், ‘‘Let me advise you about advice tomorrow” என்றபடியே தன் லேப்டாப்பில் பார்வையைப் பதித்தார் ரகு.

சேலம் ப.சுந்தர்ராஜ்