மத்திய நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணி!வாய்ப்பு

760 பேருக்கு வாய்ப்பு

இந்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களில் நிலக்கரி நிறுவனங்களின் பங்கு பிரதானமானது. மிகப்பெரிய அளவில் பணியாளர்களைக்கொண்டு செயல்படும் நிறுவனங்களில் நிலக்கரி நிறுவனங்களும் அடக்கம். இந்த நிலக்கரி நிறுவனங்கள் என்.எல்.சி., இந்தியா நிலக்கரி நிறுவனம், மத்திய நிலக்கரி நிறுவனம் என பலவிதமாக உள்ளன. இவை மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்பட்டுவருகின்றன.

இப்படி மத்திய நிலக்கரித்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிட்டெட். மத்திய மண்டலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 760 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணிப்பிரிவு வாரியான காலியிட விவரம் :
 ஃபிட்டர் - 145 இடங்கள், வெல்டர்- 75, எலக்ட்ரீசியன் - 180, மெக்கானிக் ஆட்டோ மொபைல் எலக்ட்ரானிக்ஸ் -75, மெக்கானிக் - 75, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டன்ட் - 100, பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக் - 60, மெஷினிஸ்ட் - 25, டர்னர் - 25 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பணியிடங்கள் உள்ள இந்த பிரிவுகளுக்கு ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 15.11.2018-ம் தேதியில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் படித்து அறிந்துகொண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2018.
மேலும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள http://www.centralcoalfields.in/ind/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.