இ.எஸ்.ஐ.சி-ல் மருத்துவ அதிகாரி பணி!வாய்ப்பு

771 பேருக்கு வாய்ப்பு!


தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (Employees’ State Insurance Corporation - ESIC) புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் மூலம் தொழிலாளர்கள் அடிப்படை மருத்துவம் மற்றும் வேலையின்போது ஏற்படும் விபத்துக்கான மருத்துவம் உள்ளிட்ட இதர பலன்களைப் பெறமுடியும். இத்திட்டம் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்தத் திட்டத்தில் ஆரம்பகாலத்தில் ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்கள் வேலைபார்த்தால் பதிவு செய்யவேண்டும் என்றிருந்தது தற்போது 10 பேர் இருந்தாலும் பதிவு செய்யவேண்டும். அதேபோல் இதில் பலனடைவதற்கான தொழிலாளர்களின் சம்பள உச்சவரம்பு 2017-ல் 15,000-ல் இருந்து 21,000 என மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இ.எஸ்.ஐ.சி-யில் மாநிலங்கள் வாரியாக காலியாக உள்ள 771 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Insurance Medical Officers (IMO)
சம்பளம்: மாதம் ரூ.53,100 - 1,67,800

கல்வித் தகுதி: மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று பயிற்சி முடித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 13.11.2018. ஆன்லைனில் விண்ணப்பிப்
பதற்கான கடைசித் தேதி: 10.11.2018.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in/recruitments என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.