ஆயுர்வேத அறிவியலில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்!அட்மிஷன்

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் (Ministry of AYUSH (Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha and Homeopathy) கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கழகமானது (The Central Council for Research in Ayurvedic Sciences - CCRAS) புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளில் ஆய்வுகளை நடத்தி அந்தத் துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தில் ஆயுஷ், யோகா, யுனானி, சித்தா போன்ற துறைகளுக்கான முனைவர் ஆய்வுப் படிப்பிற்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள் :

Ayush, Yoga & Naturopathy, Unani, siddha, Homoeopathy ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முனைவர் ஆய்வுப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி :

Ayush, Unani, siddha, Homoeopathy ஆகிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் MD / MS பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Yoga & Naturopathy தேர்ந்தெடுக்க விரும்புவர்கள் Yoga அல்லது Naturopathy பாடப்பிரிவில் MD பட்டம் அல்லது BNYS (Bachelor of Naturopathy & Yoga Sciences) பட்டப்படிப்புடன் 5 வருடப் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு : உரிய கல்வித் தகுதிகளுடன் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 1.1.19 அன்று 32 வயது மிகாமல் இருத்தல் அவசியம். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 13.11.18 அன்று சென்னை, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி ஆகிய இடங்களில் நடத்தப்படும் Ayush National Eligible Test 2018 க்கு அனுமதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதே சமயம் யோகா பாடப்பிரிவிற்கு AYUSH-NET தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ccras.nic.in என்ற இணையதளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பொதுப் பிரிவினர் ரூ.1000, ஒ.பி.சி. பிரிவினர் ரூ.500, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.250  விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்தல் அவசியம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 3.10.18.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.ccras.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்