பாராமெடிக்கல் படிக்க விண்ணப்பிக்கலாம்!



அட்மிஷன்

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பல்வேறு பாராமெடிக்கல் படிப்புகளுக்கு ஒற்றைச் சாளர முறையில்  மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018 -2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 10 ஆம் தேதி முதல் தொடங்கியது. தகுதியும்  விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
வழங்கப்படும் படிப்புகள்

B.Sc., (Nursing), B.Pharm, B.P.T, B.ASLP, B.Sc., Radiology and imaging Technology, B.Sc., Radio  Theraphy Technology, B.Sc., Cardio Pulmonary Perfusion Technology , B.O.T, B.Optom, B.Sc.,  Cardiac Technology,  B.Sc., Cardiac Care Technology, B.Sc., Dialysis Technology, B.Sc.,  Operation Theatre / Anesthesia Technology, B.Sc., Physician Assistant, B.Sc., Respiratory  Therapy, B.Sc., Accident and Emergency care Technology, B.Sc., Medical Laboratory Technology.
 
விண்ணப்பிக்கும் முறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் சாதிச் சான்றிதழை இரண்டு நகல் எடுத்து மேலொப்பம் பெற்று விண்ணப்பங்களை இலவசமாகப்  பெற்றுக்கொள்ளலாம். இதர வகுப்பினர் ரூ.400க்கான வங்கி வரைவோலையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ‘The Secretary.  Selection Committee. Chennai  10’ என்ற பெயரில் டிடி-ஐ பெற்று விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு  மருத்துவக் கல்லூரிகளில் வரும் 19ஆம் தேதி வரை அலுவலக நேரங்களில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் 20.9.2018 மாலை 5 மணிக்குள் ‘The Secretary. Selection Committee. Chennai - 10’ என்ற முகவரிக்கு  அனுப்பப்பட வேண்டும். கல்வித் தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.health.org அல்லது  www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

- திருவரசு.