வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு
அறிவிப்புகள் இங்கே...

யூனியன் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: ப்ரொபேஷனரி ஆஃபிசர் அல்லது மேனேஜ்மென்ட் டிரெயினி
காலியிடங்கள்: மொத்தம் 519. இதில் எஸ்.சி. 59,
எஸ்.டி. 29, ஓ.பி.சி. 172 மற்றும் பொதுப்பிரிவினருக்கு 259 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: 20 முதல் 30 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.9.18
மேலதிக தகவல்களுக்கு: www.unionbankofindia.co.in

+2 முடித்தவர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: எஸ்.எஸ்.பி. எனப்படும் சசாஸ்திர சீமா பால் எனும் துணை ராணுவப்படை
வேலை: சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பதவியில் பல்வேறு துணை மருத்துவப் பணிகள்
காலியிடங்கள்: மொத்தம் 181. சப்-இன்ஸ்
பெக்டர் பதவியில் ஸ்டாஃப் நர்ஸ் எனும் பெண்களுக்கான வேலையில் 23 பேரும், உதவி
சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலான வேலையில் 6 வேலைகளில் ஸ்டெனோ வேலையில் மட்டும் அதிகபட்சமாக 54 காலியிடங்களுக்கும், ஹெட் கான்ஸ்டபிள் பதவியில் 74 காலியிடங்களும் அதிகபட்சமாக உள்ளது
கல்வித் தகுதி: +2 படிப்பு அல்லது வேலைத் தொடர்பான டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: ஒவ்வொரு பிரிவுக்கு வயது வரம்பு வித்தியாசப்பட்டாலும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வேலைகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். சில சமூகங்களுக்கு வயது வரம்பில் தளர்ச்சியும் உண்டு
தேர்வு முறை: எழுத்து, உடல் திறன், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றில் தேர்வுகள் நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.9.18
மேலதிக தகவல்களுக்கு: www.ssb.nic.in

பட்டதாரிகளுக்கு கார்ப்பரேஷன் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: சென்னையை தலைமையிடமாகக்கொண்ட பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி
வேலை: புரொபேஷனரி ஆஃபிசர் அல்லது மேனேஜ்மென்ட் டிரெயினி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 84. இதில் எஸ்.சி. 15, எஸ்.டி. 6, ஓ.பி.சி. 21 மற்றும் பொதுப்பிரிவுக்கு 42 இடங்கள்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி | வயது வரம்பு: 20 - 30 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம் | விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.9.18
மேலதிக தகவல்களுக்கு: www.corporationbank.com

10வது படித்தவர்களுக்கு கொங்கன் ரயில்வேயில் வேலை!

நிறுவனம்: மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் ரயில்வேயில் வேலை
வேலை: டிரேக்மேன், பாயின்ட்ஸ்மேன் உட்பட 3 பிரிவுகளில் கலாசி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 100. இதில் டிரேக்மேன் 50, பாயின்ட்ஸ்மேன் 37. காலியிடங்கள் அதிகபட்சமாக உள்ளது
கல்வித் தகுதி: 10வது படிப்பு
வயது வர்ம்பு: 18 முதல் 33 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.9.18
மேலதிக தகவல்களுக்கு: www.konkanrailway.com

10வது படித்தவர்களுக்கு கொங்கன் ரயில்வேயில் வேலை!

நிறுவனம்: மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் ரயில்வேயில் வேலை
வேலை: டிரேக்மேன், பாயின்ட்ஸ்மேன் உட்பட 3 பிரிவுகளில் கலாசி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 100. இதில் டிரேக்மேன் 50, பாயின்ட்ஸ்மேன் 37. காலியிடங்கள் அதிகபட்சமாக உள்ளது
கல்வித் தகுதி: 10வது படிப்பு
வயது வர்ம்பு: 18 முதல் 33 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.9.18
மேலதிக தகவல்களுக்கு: www.konkanrailway.com

யு.பி.எஸ்.சி. வழங்கும் முப்படை அதிகாரி பணி!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி-யின் முப்படைகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. கம்பைண்ட் டிஃபன்ஸ் எக்சாம் எனும் ஒரு தேர்வு மூலம் இந்த வேலைகள் வழங்கப்படும்
வேலை: இந்திய ராணுவ அகாடமி, இந்திய நேவல் அகாடமி, ஏர்ஃபோர்ஸ் அகாடமி மற்றும் ஆஃபிசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 414. இதில் ராணுவத்தில் 100, நேவலில் 45, ஏர்ஃபோர்சில் 32 மற்றும் டிரெயினிங் அகாடமியில் 237 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: ராணுவத்துக்கு ஏதாவது டிகிரி, நேவலுக்கு பி.இ., ஏர்ஃபோர்சுக்கு அறிவியல் பாடங்களில் +2 மற்றும் டிரெயினிங் அகாடமிக்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 20 முதல் 24 வரை
தேர்வுமுறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி:3.9.18
மேலதிக தகவல்களுக்கு: www.upsc.gov.in

டிப்ளமோ எஞ்சினியர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை!

நிறுவனம்: ஏர் இந்தியாவின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட்
வேலை: ஏர் கிராஃப்ட் டெக்னீஷியன்
காலியிடங்கள்: மொத்தம் 77
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் 3 வருட டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 35க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வுமுறை: எழுத்து, உடல் திறன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: செப்டம்பர் மாதம் 5 முதல் 10 வரை நேரடியான தேர்வுகள் இருப்பதால் அந்தத் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆஜராகும்படிக்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேலதிக தகவல்களுக்கு: www.aiesl.airindia.in

தொகுப்பு: டி.ரஞ்சித்