வங்கி அதிகாரி ஆக ஐ.பீ.பி.எஸ். தேர்வுக்கு தயாராகுங்க!வாய்ப்பு

4252 பேருக்கு வாய்ப்பு!


வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 20 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க், புரபேஷனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

சமீப காலமாக ஊடகங்கள் மூலம் ஐ.பீ.பி.எஸ். என்பது அனைவருக்கும் அறிமுகமான ஒன்றாகிவிட்டது. கடும் போட்டியை உள்ளடக்கியுள்ள இத்தேர்வு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தற்போது 2019 - 20ம் ஆண்டுக்கான ஐ.பீ.பி.எஸ்., புரபேஷனரி ஆபீசர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4252 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரம்: அலகாபாத் வங்கியில் 784ம், பேங்க் ஆஃப் இந்தியாவில் 965ம், கனரா வங்கியில் 1200ம், கார்ப்பரேஷன் வங்கியில் 84ம், பஞ்சாப் சிந்த் வங்கியில்  150ம், யூகோ வங்கியில் 550ம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 519ம் என மொத்தம் 4252 புரபேஷனரி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உயர்நிலைப் பள்ளியில் அல்லது கல்லூரியில் அல்லது ஒரு நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் படிப்பு முடித்திருப்பது முக்கியம்.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயதுச் சலுகை உள்ளது.
தேர்வுமுறை: ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, ஆன்லைன் மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். பிரிலிமினரி தேர்வில் ஆங்கிலம், குவாண்டி டேட்டிவ் ஆப்டிடியூட், ரீசனிங் எபிலிடி ஆகிய 3 பிரிவுகள் இருக்கும். மெயின் தேர்வில் ரீசனிங் அண்ட் கம்ப்யூட்டர்
ஆப்டிடியூட், ஜெனரல் / எக்கானமி / பேங்கிங் அவர்னெஸ், ஆங்கிலம், டேட்டா அனாலிசிஸ் அண்ட் இன்டர்பிரடேஷன் ஆகிய பகுதிகள் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே அவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து
வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100ம், மற்றவர்கள் ரூ.600ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி
நாள் : 4.9.2018.
மேலும் விவரங்களுக்கு www.ibps.in/wp-content/uploads/CWE_PO_MPS_VIII.pdf என்ற லிங்கைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.