ரயில்பெட்டி தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சி!



வாய்ப்பு

697 பேருக்கு வாய்ப்பு!

ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) அல்லது ஐ.சி.எஃப் (ICF) பயணிகளுக்கான பெட்டிகளைத் தயாரிக்க 1955ஆம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் முதன்மை தொழிற்சாலை. இந்திய விடுதலைக்குப் பின்னர் சென்னையின் புறநகர்ப் பகுதியான பெரம்பூரில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இலகுரக, பயணிகள் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக இந்த ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய ரயில்வே துறைக்கே சென்றாலும் வெளிநாட்டுத் தொடர்வண்டி நிறுவனங்களுக்கும் இவை ஏற்றுமதி ஆகின்றன. தாய்லாந்து, பர்மா, தைவான், சாம்பியா,பிலிப்பைன்ஸ், தான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

ரயில்பெட்டி உற்பத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தத் தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் என்று சொல்லப்படும் தொழில் பழகுநர் பயிற்சிப் பணிக்கான 697 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்காலம் மூன்று ஆண்டுகள் வரை வழங்கப்படும். இது தவிர, Medical Apprentices 10 இடங்களும் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இனி அப்ரண்டீஸ் காலியிடங்களின் எண்ணிக்கையை விவரமாக பார்ப்போம்…

Freshers: Carpenter 36, Electrician 66, Fitter 100, Machinist 32, Painter 30, Welder - 162
Ex-ITI: Carpenter 18, Electrician 50, Fitter 130, Machinist 16, Welder 57, Medical Apprentices
Freshers: MLT - Radiology 04, MLT - Pathology 04 Ex-ITI: PASAA - 02

கல்வித் தகுதி: 10,+2, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 1.10.2018 தேதி அடிப்படையில் 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினருக்கு அரசு ஒதுக்கீட்டு முறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

மாத ஊக்கத்தொகை: முதல் ஆண்டு - 5,700/pm, இரண்டாம் ஆண்டு - 6,500/pm, மூன்றாம் ஆண்டு/pm - 7,350.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.icf.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.8.2018

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST/PWD பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

1.Account name: FA&CAO/ICF
2. Account No: 05680210000328
3. Bank Name: UCO Bank/ICF Colony/Chennai
4. IFSC code: UCBA0000568.

மேலும் விவரங்களை அறிய http://www.icf.indianrailways.gov.in/ticker/1530684359189app2018notification.pdf இந்த லிங்க்கை பார்க்கவும்.