ஹெவி வாட்டர் போர்டில் 229 பேருக்கு வாய்ப்பு!



வாய்ப்பு

அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பத்தை, சமன் செய்ய கனநீர் எனப்படும் ஹெவி வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அத்தியாவசிய கனநீரைத் தயாரிப்பதற்கென்று ஹெவி வாட்டர் போர்டு எனப்படும் கனநீர் வாரியம் நமது நாட்டின் பல்வேறு மையங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் பணிபுரிவதற்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிட விவரம்: பிரிவு 1ல் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் 70 இடங்களும், பிரிவு 2ல் மொத்தம் 139 இடங்கள் காலியாக உள்ளன. பிரிவு 1ன் கீழ் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிஸ்ட்ரி, பயோசயின்ஸ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. பிரிவு 2ன் கீழ் ப்ராசஸ்/பிளான்ட் ஆபரேட்டர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்(ஃபிட்டர்), டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், டிராஃட்ஸ்மேன்(சிவில்)/மெக்கானிக்கல்) ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இவை தவிர, வேறு சில பிரிவு களில் 20 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: அந்தந்த பணிகளுக்கு தொடர்புடைய எஞ்சினியரிங் பிரிவுகளில், எஞ்சினியரிங் டிப்ளமோ முடித்தவர்களும், பி.எஸ்சி. படிப்பை கெமிஸ்ட்ரி பிரிவில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.  
வயது வரம்பு: பிரிவு 1 பயிற்சியாளர்களுக்கு 18 - 24 வயதும், பிரிவு 2 பயிற்சியாளர்களுக்கு 18 - 22 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடல் தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ., பெண்கள் 148 செ.மீ., உயரம் கொண்டவர்களாகவும், இதற்கு நிகரான எடையைப் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, ஸ்கில் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.hwb.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.6.2018
மேலும் விவரங்களுக்கு www.hwb.gov.in/htmldocs/advt/HWB_1_2018/HWB_advertisement_1_2018_English.pdf என்ற லிங்க்கைப் பார்க்கவும்.