கிராமியக் கலைகள் பட்டயப்படிப்பு!



அட்மிஷன்

10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


சென்னை அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ளது தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி. இக்கல்லூரியில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான நாட்டுப்புறக்கலை துறை 3 ஆண்டு பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை குறித்து அத்துறைத் தலைவரும் கிராமியக்கலைகள் பயிற்றுநருமான க.மதுரை முத்து தெரிவித்திருக்கும் தகவல்களைப் பார்ப்போம்…

நம் கலை, கலாசாரம், பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றைக் காப்பாற்ற கடந்த 1991ஆம் ஆண்டு தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறையைத் தொடங்கியது. இத்துறையின் மூலம் கிராமியக் கலைகளை அரசு இசைக் கல்லூரியில் பட்டயப்படிப்பாக தொடர்ந்து நடத்திவருகிறது. இந்தப் பட்டயப் படிப்பு ெசயல்முறை விளக்கம், பாடப் புத்தகங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பயிற்றுவிக்கப்படும் கலைகள்: கரகம், காவடி, புரவியாட்டம் (பொய்க்கால் குதிரையாட்டம்), மயில் ஆட்டம், கிராமியப் பாடல்கள், வாய்ப்பாட்டு (குரலிசை), காளை ஆட்டம் ஆகிய அனைத்தும் கிராமத்துப் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படியும், தொழில்முறை கலைகளாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.கல்வித் தகுதி: இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஆர்வமுள்ள, அனுபவமுள்ளவர்களுக்கு படிப்பு, வயது பரிசீலிக்கப்படும்.)

வயது வரம்பு: வயது வரம்பைப் பொறுத்த வரை 16 முதல் 22 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  
விண்ணப்பிக்கும் முறை: முதல்வர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, கிரீன் வேஸ் சாலை, சென்னை - 28 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஊக்கத்தொகை: மாதத்திற்கு ரூ.5,00 என 3 ஆண்டுகள். (ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.)
வெளியூர் மாணவிகளுக்கு மட்டும் தங்கும் இடவசதி உண்டு. பஸ் பாஸ், ரயில் பயண கட்டண சலுகைகளும் உண்டு.

சான்றிதழ்: எழுத்துத் தேர்வு நடத்தப்படும். பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு கவின் கலைக் கல்லூரி பல்கலைக்கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப தேதி: விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். eniyanmaduraimuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 1ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

வேலைவாய்ப்பு: அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள். இந்தப் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தொழில்முறை கலைஞர்களாகவும், கலைகளைப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் தொடங்குதல்,  வெளிநாடுகளில் நம் கலை, பண்பாடு, கலாசார மரபுக் கலைகளைப் பயிற்றுவிப்பது என  வேலைவாய்ப்புகள் பலவகையிலும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: 9840195532 / 8056191279 / 044-24937217 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் artandculture.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

 தொகுப்பு: தோ.திருத்துவராஜ்