தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!அட்மிஷ்ன்

தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973-ல் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை காமராசர் சாலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் இக்கல்வி நிலையம் புதுடெல்லியில் உள்ள சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் நொய்டாவிலுள்ள வி.வி. கிரி தேசியத் தொழிலாளர் கல்வி நிலையத்துடன் இணைந்து புத்தறிவுப் பயிற்சிகளை நடத்திவருகிறது.

இக்கல்வி நிலையம் 2001 முதல் முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்பு நடத்துவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தால் ஓர் ஆராய்ச்சி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் 2018-19 ஆண்டிற்கான இளங்கலை, முதுகலைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்வி நிறுவனத்தில், தொழிலாளர் மேலாண்மையில் இளங்கலைப் பட்டப்படிப்பு (B.A - Labour Managment), முதுகலைப் பட்டப்படிப்பு (M.A-Labour Managment) ஆகிய துறைகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. மேலும், இக்கல்வி நிலையம் ஓராண்டு பகுதிநேர வகுப்பாகத் (மாலை) தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டயப்படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ) மற்றும் தொழிலாளர் சட்டங்களும் மற்றும் நிர்வாகவியல் சட்டமும் குறித்த ஓராண்டு (பகுதிநேர - வார இறுதி நாட்களில்) பட்டயப்படிப்பு போன்ற துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. பி.ஏ.

மற்றும் எம்.ஏ. படிப்புகள் சென்னைப் பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பட்டயப்படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடந்துவருகிறது.கல்வித் தகுதி: விருப்பமும் தகுதியும் கொண்ட பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பிலும், பட்டம் முடித்த மாணவர்கள் முதுகலைப் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை: ஆர்வமும் சரியான கல்வித்தகுதியும்கொண்டு விண்ணப்பிப்பவர்கள், பிளஸ் 2 மற்றும் இளங்கலைப் பட்டத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டு அட்மிஷன் நடத்தப்படும்.
 
முக்கிய தேதிகள்

தமிழக அரசின் கல்வி நிலையத்தில் பி.ஏ. பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்புவோர் 30.5.2018-க்குள்ளும், மற்ற பட்டயப்படிப்புகளுக்கு 29.6.2018-க்குள்ளும் விண்ணப்பித்தல் அவசியம்.

வேலைவாய்ப்பு

இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்களைப் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக நியமனம் செய்ய, மாணவர்களைத் தேர்வுசெய்து, பணி நியமன உத்தரவு வழங்குகிறார்கள். இதன்படி, பல்வேறு மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவளத் துறையில் பணிபுரிந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு www.labour.tn.gov.in என்ற இணையதளத்தையும் அல்லது 044-2844 0102, 2844 - 5778, 9884159410 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.

- வெங்கட்