மாற்றுத்திறனாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்புப் படிப்புகள்!அட்மிஷன்

மாற்றுத்திறனாளிகளுக்கு உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்புப் படிப்புகளுக்கான அறிவிப்பை NILD என்று சொல்லப்படும் National Institute for Locomotor Disabilities கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் நடத்தும் பி.பி.ஓ., பி.பி.டி., பி.ஓ.டி., போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது.

கல்வித் தகுதி: +2-ல் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பைக் கைவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலானவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.வயது வரம்பு: ஜனவரி 1, 1998 முதல் டிசம்பர் 31, 2001ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி.,/மாற்றுத்திறனாளிகள் ஜனவரி 1, 1993 முதல் டிசம்பர் 31, 2001ம் தேதிக்குள் பிறந்தவராக இருந்தால் போதுமானது.

தேர்வு முறை: பொதுஅறிவு, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். அனைத்துக் கேள்விகளும் மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகளாகவே இருக்கும். தவறான கேள்வி களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படாது.தேர்வு மையங்கள்: அகர்தலா, ஐஸ்வால், போபால், புவனேஸ்வர், சென்னை, கௌஹாத்தி, இம்பால், இட்டாநகர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கோழிக்கோடு, லக்னோ, மதுரை, மும்பை, நாஹர்லாகுன், புதுடெல்லி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, செகந்தராபாத், சிலிகுரி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்.

சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கல்வி நிறுவனங்கள்திவ்யாங்

ஜென் கல்வி நிறுவனம் - கொல்கத்தா சுவாமி விவேகானந்த் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரீஹாபிலிடேஷன் டிரெய்னிங் அண்ட் ரிசர்ச் - ஒடிசாநேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவர்மென்ட் ஆஃப் பர்ஷன்ஸ் வித் மல்டிப்பில் டிஸெபிலிட்டி - சென்னைவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.niohkol.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாகப் பூர்த்தி செய்து The Chairman, CET-2018, C/O Director, National Institute for Locomotor Disabilities(NILD), BT Road, Bonhoogly, Kolkata - 700 090 (West Bengal) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.600 ‘Director, National Institute for Orthopaedically Handicapped(NIOH)’ என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.5.2018.
தேர்வு நடைபெறும் நாள்: 17.6.2018.
மேலும் விவரங்களுக்கு www.niohkol.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- முத்து