உதவித் தொகையுடன் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்புகள்!



அட்மிஷன்

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் S.N. Bose National Centre for Basic Sciences (SNBNCBS) கல்விநிறுவனம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இந்திய அளவில் செயல்படும் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் முக்கியமான இக்கல்வி நிறுவனம் இந்திய முதன்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேசக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேசத் தரத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது.

இக்கல்வி நிறுவனம் கொல்கத்தா பல்கலைகழகத்துடன் இணைந்து இயற்பியல் மற்றும் கணிதத்தில் முதுநிலையுடன்கூடிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான 2018ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படிப்புகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

சர்வதேச தரத்தில் ஆராய்ச்சிப் படிப்பைப் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல் மற்றும் கணிதத் துறைகளில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் தங்கள் இளங்கலைப் பட்டப் படிப்பில் 60%, எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் 55% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். அல்லது JEST 2018 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்லது NGPE 2018 தேர்வில் டாப் 25 ரேங்க் எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

இந்திய அரசின் முதன்மைக் கல்விநிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் முதுநிலைப் பட்டப்படிப்பை 2016க்கு பின் முடித்தவராக இருத்தல் வயதுவரம்புத் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்

உதவித்தொகை

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப்படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரமும் பின் முதுநிலைப் படிப்பு முடித்த பின் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான ரிசர்ச் ஃபெல்லோஷிப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு அதற்கேற்ற உதவித்தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் கொண்டு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.bose.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.5.2018.மேலும் விவரங்களுக்கு http://www.bose.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா