ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க NCHM JEE 2018 நுழைவுத் தேர்வு



நுழைவுத் தேர்வு

நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (National Council for Hotel Management and Catering Technology) என்பது 1984 முதல் மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின்கீழே, தன்னாட்சிக் கல்வி அமைப்பாகச் செயலாற்றுகிறது. இந்தியா முழுவதும் சங்கிலித் தொடராக ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்கள் NCHMCT-யில் அங்கீகாரம் பெற்று இத்தொழில்நுட்பக் கல்வியைத் தருகிறது. பூசா, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சண்டிகார், கோவா, லஜ்பத் நகர் மற்றும் பல இடங்களிலுமாக மொத்தம் 58 கல்வி நிலையங்கள் உள்ளன.

B.Sc., ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பிற்கான அறிவிப்பை NCHMCT வெளியிட்டுள்ளது.

1. ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் (Hospitality and Hotel Administration)2. ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிசேஷன்) (Hospitality and Hotel Administration - Specialisation)

1. B.Sc., ஹாஸ்பிட்டாலிட்டி - ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் ஜெனரிக் படிப்புகள், பெங்களூரிலும், போபாலிலும், புவனேஸ்வரிலும் சண்டிகார், சென்னை, காந்தி நகர், கோவா, குர்தாஸ்ப்பூர், கவுஹாத்தி, குவாலியர், வைசாலி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நியூடெல்லி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் போன்ற இடங்களில் உள்ளன.

2. B.Sc., ஹாஸ்பிட்டாலிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் - ஸ்பெஷலிசேஷன் படிப்புகள் சென்னை, கோவா, கொல்கத்தா, மும்பையிலும் உள்ளன.
மாநில அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் எங்கெல்லாம் இப்பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

மாநில அரசு நிறுவனங்கள்

B.Sc., ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் - ஜெனரிக் படிப்புகள்.பத்தின்டா (Bathinda), சண்டிகார், டேராடூன், பரிதாபாத், கோழிக்கோடு, குருஷேத்ரா, புதுடெல்லி, திருச்சி, ரோஹ்டாக், புதுச்சேரி, பானிபட் (ஹரியானா), ஐதராபாத், திருப்பதி, இந்தூர், யமுனா நகர், ஹமிர்பூர்,  சில்வசா ஆகிய இடங்களில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் உள்ளன.

தனியார் நிறுவனங்கள்

B.Sc., ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் ஜெனரிக் படிப்புகள்.

1.ரஞ்சிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - புவனேஷ்வர்
2.வேல்ஸ் காலேஜ் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - சென்னை.
3.சக்தி காலேஜ் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐதராபாத்.
4.சி.டி. இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஜலந்தர்.
5.எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - சென்னை (காட்டாங்குளத்தூர்)
6.குருநானக் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - கொல்கத்தா.
7.தேஷ் பகத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பஞ்சாப்.
8.மீரட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - மீரட்.
9.சண்டிகார் காலேஜ் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பஞ்சாப்.
10.ரேயத் அண்ட் பஷ்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - மொஹாலி சகாயூரன் (Sahauran)
11.மூணாறு கேட்டரிங் காலேஜ் - மூணாறு கேரளா.
12.கே.சி.காலேஜ் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பஞ்சாப்.
13.சிட்காரா ஸ்கூல் ஆஃப் ஹாஸ்பிட்டாலிட்டி - பாட்டியாலா.
14.ஓரியண்டல் ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - வயனாடு.
15.லலித்சூரி ஹாஸ்பிட்டாலிட்டி ஸ்கூல் - பரிதாபாத்.
16.அசோக் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிட்டாலிட்டி டூரிசம் மேனேஜ்மென்ட் - புதுடெல்லி

ஹோட்டல் மேனேஜ்மென்ட்

மொத்தம் 6 செமஸ்டர்கள் உள்ள இந்த 3 ஆண்டு படிப்பில், வரவேற்புத் துறைக்கான திறன்கள், நுண்ணறிவு, பொறுப்புகள் கற்பிக்கப்படுகின்றன. உணவு உற்பத்தி, உணவு, குளிர்பானங்கள் தயாரிப்பு, வரவேற்பு முறைகள், உபசரிப்பு, முன் அலுவலகப் பராமரிப்பு, உள் பராமரிப்பு மற்றும் உணவகக் கணக்கியல், உணவுத்தரம், பாதுகாப்பு, சேமிப்பு, மனிதவள மேலாண்மை, பொருளாதார மேலாண்மை கற்றுத் தரப்படும்.

வேலை வாய்ப்புகள்

உணவக, வரவேற்புத் தொழிலகங்கள், உணவகங்களில் சமையலறை மேலாண்மை,விமான சமையலறை, விமான சேவைகள், இந்தியக் கப்பற்படை சேவைகள், நட்சத்திர உணவகங்களில் விருந்தினர், வாடிக்கையாளர் உபசரிப்பு, மருத்துவமனை உணவு சேவை, ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஃபுட் கிராப்ட் நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் பயிற்றுநர்கள், கப்பல் சேவைகள், விற்பனை, விளம்பரத்துறை, தொடர் வண்டி உணவகம் மற்றும் சேவைகள், மத்திய-மாநில சுற்றுலாத்துறை, ஆய்வு விடுதிகள் என பல்வேறுபட்ட பிரிவுகளில் வேலைக்கான வாய்ப்புகள் கிட்டுவது மட்டுமின்றி, சுய சேவை செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

விண்ணப்பிக்கத் தகுதி

ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு +2வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1, 2018 அன்று பொதுப்
பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வயதும், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 25 வயதும் உச்ச வரம்பாகக்
கொடுக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு

1. ஆதிதிராவிடர்களுக்கு 15% விழுக்காடும், (மத்திய மற்றும் மாநில)
2. 7½% பழங்குடி சமூகத்தினருக்கும், (மத்திய மற்றும் மாநில)
3. 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (மத்திய அரசில்)
4. 5% மாற்றுத்திறனாளிகளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி இடஒதுக்கீடு அளிக்கப்படுகின்றது.

நுழைவுத் தேர்வு

இப்படிப்பிற்கான NCHMCT நடத்தும் 3 மணி நேர நுழைவுத் தேர்வில்,நியூமரிக்கல் எபிலிட்டி, அனலட்டிக்கல் எபிலிட்டி என்ற பிரிவில் 30,
ரீசனிங் மற்றும் லாஜிக்கல் டிடக்‌ஷனில் 30, பொது அறிவு, மற்றும் தற்கால நிகழ்வில் 30, ஆங்கிலத்தில் 60, ஆப்டிடியூட் ஃபார் சர்வீஸ் செக்டார் 50 என ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.முதல் நான்கு பிரிவுகளில் ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் உண்டு. தவறான வினாவிற்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

சர்வீஸ் செக்டார் பிரிவிற்கு, சரியான விடைக்கு 1 மதிப்பெண், அடுத்த சரியான விடைக்கு 0.75 மதிப்பெண், அடுத்த சரியான விடைக்கு 0.50 மதிப்பெண் என்ற கிரேடு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http.//apply admission.net/nchmjee 2018 அல்லது www.nchm.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.800ம், ஆதிதிராவிடர், பழங்
குடியினர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ரூ.400ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இத்தொகையை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.4.2018.
மேலும் விவரங்களுக்கு http://apply admission.net/nchmjee2018
www.nchm.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.