தென்னக ரயில்வேயில் வேலை!



வாய்ப்பு

விண்ணப்பிக்க தயாராகுங்க!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை. நாடு முழுவதும் பரந்த சேவையாற்றும் இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பைப் பெறுவது இளைஞர்களின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. அவர்களின் ஆவலைப் பூர்த்திசெய்யும் வகையில் ஆண்டுதோறும் பல ஆயிரம் பணியிடங்களை ரயில்வே துறை நிரப்பி வருகிறது.

இந்த ஆண்டில் தற்போது 27 ஆயிரத்து 19 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணிக்கு 17 ஆயிரத்து 849 பேரும், டெக்னீசியன் பணிக்கு 9 ஆயிரத்து 170 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அந்தந்த ரயில்வே மண்டலம் வாரியான காலியிட விவரம் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். தென்னக ரயில்வேயைப் பொறுத்தவரை சென்னை- பெரம்பூர், கோவை-போத்தனூர், திருச்சி  பொன்மலை ஆகிய பணிமனைகளில் மொத்தம் 1818 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் விவரத்தைப் பார்ப்போம்.

பணியிடங்கள்

தென்னக ரயில்வேயின் பெரம்பூர் -737 , போத்தனூர் 457, பொன்மலை 624 ஆகிய பகுதிகளில் உள்ள வெல்டர், எலக்ட்ரீசியன், பெயின்டர், மெடிக்கல் அசிஸ்டன்ட் , மெக்கானிக், மெசினிஸ்ட் என பல்துறை பணிகளுக்கான காலியிடங்கள் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் நிரப்பப்பட
உள்ளது.

கல்வித்தகுதி

தென்னக ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் ஐ.டி.ஐ படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் மெடிக்கல் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்புவோர் 12ம் வகுப்பு முடித்திருத்தல் அவசியம்.

வயதுவரம்பு

பல்வேறு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடத்தப்படுவதால் ஒவ்வொரு பணிகளுக்கும் உட்பட்ட வயது வரம்பு கொண்டிருத்தல் அவசியம். வெல்டர் மற்றும் மெடிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 21.02.2018ன் படி விண்ணப்பதாரர்கள் 22 வயது பூர்த்தியடைந்தவராகவும், மற்ற பணிகளுக்கு 24 வயதுக்குட்பட்டும் விண்ணப்பதாரர்கள் இருத்தல் வேண்டும். 

பயிற்சி

பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ முடித்து விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ஒன்று முதல் மூன்று வருடம் வரை பயிற்சிகாலமாக அனுசரிக்கப்படுகிறது. வெல்டர் பணிக்கு 1 முதல் 3 வருடமும், ஃபிட்டர், பெயின்டர், எலக்ட்ரீசியன் முதலிய பணிகளுக்கு இரண்டு வருடமும் மற்றும்  மெடிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 1 முதல் 3 ஆண்டு காலம் வரை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் இப்பயிற்சிக் காலத்தில் அந்தந்தப் பணிகளுக்கும், பயிற்சிக் காலத்திற்கும் உண்டான ஊக்கத்தொகை  வழங்கப்படும். இந்தப் பயிற்சிக் காலம் அந்தந்தப் பணிமனைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

தேர்வு செய்யப்படும் முறை

விருப்பமும் தகுதியும்  கொண்டு விண்ணப்பித்தவர்கள் தாங்கள் பத்தாம் வகுப்பில் அல்லது ஐ.டி.ஐயில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் sc/st மாணவர்கள் தங்கள் படிப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். இப்படி ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட மாணவர்களுக்கு உடற்தகுதியின் அடிப்படையில் பணி உறுதிசெய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் சென்று  விண்ணப் படிவத்தை தரவிறக்கம் செய்து  விண்ணப்பிக்கலாம். திருச்சி, போத்தனூர் ஆகிய இடங்களுக்கு  22.02.2018 அன்று வரை விண்ணப்பப் படிவமானது செயல்பாட்டில் இருக்கும். பெரம்பூர் பணிமனைக்கு விண்ணப்பிக்க 23.1.2018 கடைசி நாள். விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஐ செலுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்