ரூ.60,000 ஊக்கத்தொகையுடன் M.Sc. முதுநிலைப் பட்டப்படிப்பு!நுழைவுத் தேர்வு

NEST 2018 நுழைவுத் தேர்வுக்கு தயாராகுங்க!


மத்திய அரசின் கீழ் இயங்கும் புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் எஜுகேஷன் ரிசர்ச் (National Institute of Science and Education Research - NISER) என்ற தன்னாட்சிக் கல்வி நிறுவனமும், மும்பை பல்கலைக்கழகத்தின் அணு ஆற்றல் துறையின் ‘சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் ஃபார் ேபசிக் சயின்சஸ்’ (Centre of Excellence for Basic Sciences - CEBS) என்ற தன்னாட்சிக் கல்வி நிறுவனமும் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் என்ற அடிப்படை அறிவியல் பாடங்களில் ஆய்வுச் சூழலில் ஆக்கப்பூர்வக் கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்றன.

இப்படிப்புகளை NISER மற்றும் CEBS கல்வி நிறுவனங்கள் +2 முடித்த மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. (M.Sc. - Integrated) முதுநிலைப் பட்டப்படிப்பாக வழங்குகின்றன. இப்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வுதான் நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் (NEST 2010).

கல்வி கற்க ஊக்கத்ெதாகை

இப்படிப்பைக் கற்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் அணு ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இன்னோவேஷன் இன் சயின்ஸ் பர்சூயிங் ஃபார் இன்ஸ்பையர் ரிசர்ச் எஜுகேஷன் (Innovation in Science Persuing for Inspired Research Education & Inspire) ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.60,000 மற்றும் கோடைக்கால புராஜெக்ட்டுக்கு உதவியாக ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி: நெஸ்ட் தேர்விற்கு விண்ணப்பிக்க +1, +2 முறையான பள்ளிப் படிப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் என்ற பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் குறைந்தது 60%, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: இத்தேர்விற்கு ஆகஸ்ட் 1, 1998 அல்லது அதற்குப் பின் பிறந்த பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயதில் சலுகை உண்டு.
இட ஒதுக்கீடு: இப்படிப்பிற்கு NISER-ல் 172 இடங்களும், CEBS-ல் 47 இடங்களும் உண்டு. இவற்றில் முறையே 2 இடங்கள் ஜம்மு & காஷ்மீர் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த இடங்களில் 27 % இடங்கள் நான்-கிரிமிலேயர்படி பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களும், 15% இடங்கள் எஸ்சி-க்களும், 7.5% இடங்கள் எஸ்.டி-யினருக்கும், 3% இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வு: சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான இத்தேர்வில் 5 பிரிவுகள் உண்டு. முதல் பிரிவு 30 மதிப்பெண்களுக்கான பொதுப்பிரிவாகும். உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் என்ற பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 50 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கேட்கப்படும்.
தேர்வு எழுதுபவர்கள், எத்தனை பாடங்கள் மற்றும் பிரிவுகளுக்கு வேண்டுமானாலும் விடை எழுதலாம். இவற்றில் அதிக மதிப்பெண் பெற ஏதேனும் மூன்று பிரிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வினாத்தாள் மாணவர்களின் காம்ப்ரிஹென்சன் மற்றும் அனாலிட்டிக்கல் எபிலிட்டியை சோதனை செய்யும் முறையில் அமைந்திருக்கும். பாடப் பிரிவுகளில் சில வினாக்களுக்குத் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். சில வினாக்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் சரியானவையாக இருக்கும். இக்குறிப்புகளைத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாடத்திட்டம்: 1. பொதுப்பிரிவிற்குப் பாடத்திட்டம் என்று தரப்படவில்லையென்றும், வானியல், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், சுற்றுப்புற அறிவியல் இவற்றிலிருந்து வினாக்கள் இருக்கும்.

2. உயிரியல் பிரிவில் செல் பயாலஜி, ஜெனிட்டிக்ஸ் மற்றும் எவாலூசன், ஈகாலஜி, மனிதர்களும் சுற்றுப்புறமும், உயிர் தொழில்நுட்பம், விலங்கியல், தாவரவியல் என்ற உட்தலைப்புகளும் இடம்பெறும்.

வேதியியல் இயற்பியல் வேதியியல்: வேதியியல் அளவீடுகள், மூலக்கூறு கொள்கை, வாயு, திரவ நிலைகள், அணு மாதிரி வடிவம், மூலக்கூறு பிணைப்பு, வெப்ப இயக்கவியல், வேதிச்சமநிலை, மின் வேதியியல், வேதி இயக்கவியல், திட, திரவ, வாயு நிலைகள், புற வேதியியல் (உட்கவர்தல், கூழ்மங்கள்) ஆகியவை இடம்பெறும்கனிம வேதியியல்: மூலங்கள் அவற்றின் பீரியாடிக் ப்ராப்பர்ட்டிஸ், ஹைட்ரஜன், எஸ்-பிளாக் மற்றும் பி, எஃப், டி பிளாக் எலிமண்ட்ஸ், கோ ஆர்டினேஷன் கூட்டுப்பொருள்கள், உலோகங்கள், உலோகக் கலவைகள் ஆகியவை இடம்பெறும்.

கரிம வேதியியல்: அடிப்படைக் கோட்பாடுகள், ரீ ஆக்டிவ் இன்டர்மீடியட்ஸ், ஐசோமரிசம், நாமன் கிளேக்சர், அல்கேன்கள், அல்கீன், அல்கைன்கள், அரோமேட்டிக் காம்பவுன்ட்ஸ், ஹேலோ அல்கைன்கள், ஹேலோ அரேன்சர், ஆல்கஹால்கள், ஃபீனால்கள், ஈதர்கள், கீட்டோன்கள், கார்பாக்சலிக் அமிலங்கள், அமைன்கள், கார்போஹைட்ரேட்டுகள், அமினோ ஆசிட்ஸ், புரோட்டீன்கள், பாலிமர் ஆகியவை இடம் பெறும்.

இயற்பியல்: அடிப்படை அறிவியல், மெக்கானிக்ஸ், சவுண்ட் அண்ட் மெக்கானிக்கல் வேல்யூஸ், தெர்மல் பிசிக்ஸ், எலக்ட்ரிசிட்டி அண்ட் மேக்னட்டிசம், ஆப்டிக்ஸ், மாடர்ன் பிசிக்ஸ் இவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க www.nestexam.in என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்குப் பொதுப்பிரிவு, பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு ஆண்களுக்கு ரூ.1000, எஸ்.சி., எஸ்.டி. ஆண்களுக்கு ரூ.500, பெண்களுக்கு ரூ.500, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 கட்டணமாகும். இக்கட்டணத்தை நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகச் செலுத்தலாம்.

முக்கிய நாட்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி
நாள்: 5.3.2018
தேர்வு நாள்: 2.6.2018
மேலும் விவரங்களுக்கு www.nestexam.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.